பாரம்பரிய அர்ச்சகர்களின் உரிமைகள்-I

பாரம்பரிய அர்ச்சகர்களின் உரிமைகள் குறித்து தொடர்ச்சியாக சில பதிவுகள் எழுத திட்டமிட்டுள்ளேன் .கீழ்கண்ட விஷயங்களை அவை விவாத பொருளாக கொண்டிருக்கும் .
1) கேரளாவில் நடந்த நியமனம் .அம்மாநில முதல்வரின் சாதனையா ?
2) உச்சநீதிமன்றம் என்ன சொல்கிறது ?
3) கேரள வழிமுறை தமிழகத்தில் சட்டப்படி ஏன் நடக்காது ?
4) கேரளா எப்படி சிக்கி கொண்டது ?
5)நாராயணகுரு செய்தது புரட்சியா ?
6) ஏனைய மதங்களை போல அல்லாமல் ஹிந்து மதம் அனைவரும் அர்ச்சகர் ஆக தடையாக இருக்கிறதா?
7)பூட்டி கிடைக்கும் கோவில்கள் ,அரிதாகி வரும் அர்ச்சகர்கள் .தீர்வு என்ன ?
8) அர்ச்சகர்களுக்கு அனுஷ்டான குறைவு உண்டெனில் அதற்கு யார் காரணம் ?
9) அர்ச்சகர் வேலை அரசு வேலை ஆவதில் உள்ள சிக்கல்
10) அனைத்து அர்ச்சகர்களும் ஆகம ஞானம் உள்ளவர்களா ?
11) நான் இந்த நிலைப்பாட்டை அடைந்தது எப்படி ?என்னும் சுயபுராணம்
12) இனி நாம் செய்ய வேண்டியது என்ன ?
13) அர்ச்சகர்களுக்கு ஒரு வேண்டுகோள்

இடது சாரிகள் ,வலது சாரிகள் ,நவயுக ஆன்மீக வாதிகள் ,இறை மறுப்பாளர்கள் ,ஹிந்துத்துவர்கள் ,திராவிட இயக்கத்தினர் என்று அனைத்து தரப்பினரின் எதிர்ப்பையும் ஒரே நேரத்தில் பெற்றுக்கொள்ள ஒரு எளிய வழி உண்டு .பாரம்பரிய அர்ச்சகர்களின் உரிமையை பற்றி பேசினால் போதும் .மேல குறிப்பிட்ட அனைத்து தரப்பினரும் கல்லை எறிய தொடங்குவார்கள்.அனைவரும் அர்ச்சகர் ஆவது சரியல்ல என்றுகூறினால் ஆன்மீகவாதிகளின் முகமே அஷ்ட கோணல் ஆகிவிடும் .கோவில்பூஜை உரிமையை அனைவருக்கும் பொதுவென்று வைப்போம் என்று கூறும் நபர்கள் எத்தகையோர் ?
அ ) சொந்த இயக்கத்தில் ஒருவன் கூட நம்பிக்கை உடையவை இல்லை என்னும் உண்மையை உணர்ந்து சொத்தை காபந்து செய்ய கல்லறைக்கு போகும் வயதில் கல்யாணம் செய்துகொண்ட சிந்தனையாளர் வழி தொண்டர்கள்
ஆ ) அந்த இயக்கத்தின் தற்போதைய தலைவருக்கு கால காலத்தில் குழந்தை பிறந்துவிட்டதால் அவருக்கு 80 வயதில் திருமணம் செய்ய வேண்டிய துர்பாக்கியம் ஏதும் ஏற்படவில்லை .தனது மகனுக்கு முடிசூட்டி விட்டார் .அர்ச்சகர் மகன் அர்ச்சகர் ஆக வேண்டும் எனில் தீக்ஷை வேண்டும் .ஆனால் இவருக்கு அது கூட தேவையில்லை .தந்தைக்கு பின் மகன் அர்ச்சகர் ஆக வேண்டும் என்பதை எதிர்க்கும் நபர்கள் இந்த விஷயத்தில் பேசாமல் இருந்து விட்டனர்
இ )மற்றொரு கட்சியில் ஒருகாலத்தில் தமிழகத்தையே தனது குடும்பத்திற்கு மண்டல வாரியாக பங்கு பிரித்து கொடுத்த சம்பவம் நடந்தது.
ஈ ) மற்றொரு பிரிவினர் , தங்களுடைய சிந்தனை செம்மல்கள் தலைமுறை தலைமுறையாக JNU வில் படித்து வரும் மர்மம் என்ன ?போலீசிடம் அடிவாங்கும் அடிமட்ட தொண்டனும் அவ்வாறே தலைமுறை தலைமுறையாக பள்ளி இறுதி வகுப்போடு வரக்காரணம் என்ன என்று யோசிப்பதில்லை .
உ ) இதில் ஹிந்துத்துவர்களின் நிலை தான் பரிதாபகரமானது .முன்னாள் கொலைகாரன் ,கொலைக்குற்றம் சாட்டப்பட்டவன் ,பாலியல் வழக்கில் சிக்கியவன் ,வனத்துறை இடத்தை ஆக்ரமிப்பவன் என்று அனைத்து போக்கிரிகளையும் மதத்தின் பெயரால் ,மதமாற்றத்தை தடுப்பதின் பெயரால் அதிரிப்பார்கள் .ஆனால் பாரம்பர்ய அர்ச்சகர் உரிமைக்கு ஆதரவாக குரல் கொடுக்க வாய் எளிதில் வராது .விவேகானந்தர் அர்ச்சக வகுப்பை பற்றி நல்லவிதமாக சொல்லவில்லையே ..(ராமகிருஷ்ணரும் அர்ச்சகர் தான் என்பதை சீடனும்சீடனின் சீடர்களும் வசதியாக மறந்து விட்டனர் ).கீழே தள்ளிய குதிரை குழியையும் பறிப்பது போல பாரம்பர்ய அர்ச்சகர்களின் உரிமைக்கு ஊறு விளைவிக்கும் வேலைகளில் காலம் காலமாக ஈடு பட்டு வருகிகின்றனர் .இந்த பின்னணியில் கேரள விவகாரங்களை பார்ப்போம் .
(for discussions on facebook: https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fpermalink.php%3Fstory_fbid%3D1003564453127668%26id%3D100004223685325&width=500

*******************************************************************************

பொதுவாக அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசியல் நடவடிக்கையை பார்ப்பவர்கள் அனைவரும் இது என்னவோ கோவிலில் பூஜை செய்யும் ஐயர்கள் பிரச்சனை என்ற எண்ணமே கொண்டுள்ளனர் .இது ஒவ்வொரு ஹிந்துவுனுடைய பிரச்சனை .இதற்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது அனைத்து ஹிந்துக்களுடைய கடமையும் கூட .
முதலில் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் .இந்த சட்டத்தால் பாதிக்கப்பட போவது அந்தண அர்ச்சகர்கள் மட்டும் அல்ல .அனைத்து ஜாதி /வர்ண அர்ச்சகர்களும் தான் .( ஒருவேளை அந்தண அர்ச்சகர்களுக்கு மட்டும் தான் பாதிப்பு என்றாலும் கூட நான் இதே அளவு கடுமையுடன் எதிர்வினையாற்றி இருப்பேன்) .இந்த சட்டத்திற்கான அடிப்படை எங்கிருந்து வருகிறது ? சமயத்தையும் அரசியலையும் குழப்பிக்கொள்வதில் இருந்து வருகிறது .அந்நிய மத மரபுகளை ஹிந்து மதத்தில் திணிக்க முயல்வதில் இருந்து வருகிறது .ஓட்டு அரசியலில் இருந்து வருகிறது .பிரச்சனைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்
1) சமூக சீர்திருத்தங்கள் ,அரசியல் உரிமைகள் ஆகியவை அந்த புலத்தில் தான் நடைபெற வேண்டுமே தவிர மத விஷயங்களில் நுழைய கூடாது .எந்த ஒரு தனி தமிழ் வெறியனும் ஒரு இஸ்லாமியனிடம் சென்று அரபியில் ஓதாதே ,தமிழில் ஓது என்று பிரச்சனை செய்வதில்லை .ஆனால் நம் கோவில்களில் வடமொழியில் குடமுழுக்கு நடத்தக்கூடாது என்று கூறும் அளவிற்கு வந்துவிட்டனர் .இது போலத்தான் ,இந்த அர்ச்சகர் விவகாரமும் .அற்ப அரசியல் நடவடிக்கை .பின்தங்கிய வகுப்பினரின் கல்வி ,பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி வகை செய்வது மிகவும் கடினம் .செய்ய இன்றைய அரிசியல்வாதிகளுக்கு விருப்பமும் இல்லை .எனவேதான் இத்தகைய symbolic gestures வழியாக ஊரை ஏமாற்ற பார்க்கின்றனர் .ஒரு நாயர் சபரிமலை கோயில் மேல்சாந்தி ஆகிவிட்டால் அதனால் டீ அடித்து சிரமப்படும் அனைத்து நாயர்களும் முன்னேறிவிடுவார்களா ? அனைத்து நாயர்களின் வங்கி கணக்கிலும் பணம் வருமா ? ஒரு நாள் கூத்து .அதோடு சரி .மாறாக பணம் வந்து சேர்ந்தால் நாயே என்று கூப்பிட்டவன் முதலாளி என்பான் .இந்த உண்மையை புரிந்துகொள்பவர்கள் யாரும் இந்த கூத்துக்கு மயங்க மாட்டார்கள் .
2)இன்றய அரசியல் தலைவர்கள் பலருக்கும் மூட நம்பிக்கை உண்டு .மத நம்பிக்கை இல்லை .ஒரு சில திராவிட கட்சிகளின் கொள்கைகள் நமக்கு தெரிந்தது தான் .பதவி வேண்டும் என்றால் கழுதைக்கு தாலி கட்ட தயாராக இருப்பான் .ஆனால் கடவுள் என்று ஒருவர் உண்டு ;அவருக்கு அடுக்காததை செய்யாமல் இருப்போம் என்ற எண்ணம் சிறிது கூட இருக்காது .இது நம் முன் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை .திராவிட இயக்கம் தான் இப்படி என்றில்லை .ஹிந்துத்துவ இயக்க பெருந்தலைகள் பலருக்கும் கூட இறை நம்பிக்கை இல்லை .கேட்க விநோதமாகத்தான் இருக்கும் .ஆனால் உண்மை .ராமகோபாலன் தொடங்கி மிக சிலருக்கு மட்டுமே இறை நம்பிக்கை வலுவாக உள்ளது .ஏனைய நபர்கள் ஹிந்து மதத்தை ஒரு கலாச்சார ,அரசியல் கருவியாக மட்டுமே கையாள்கிறார்கள் .வேதம் அனாதியானது என்பதையே 90 % ஹிந்துத்துவர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள் .இத்தகைய கூட்டணி முடிவு எடுக்கும் இடத்தில இருந்தால் ஹிந்து மதத்தை அழிக்கும் வேலையை செய்யாமல் வேறு எதை செய்வார்கள் ? சமீபத்திய கேரள அர்ச்சகர் நியமனத்தில் இடதுசாரிகளுக்கு ஹிந்துத்துவர்களுக்கும் பெரிய போட்டியே நடந்தது .இருவரும் அந்த “சாதனைக்கு” தாங்களே பொறுப்பு என்று முழக்கம் இட்டனர் .நல்ல காலம் ,தமிழகத்தில் VHP கொள்கை அளவில் அதை எதிர்த்தது 3) இதில் இருக்கும் ஓட்டு அரசியலையும் நாம் பார்க்க வேண்டும் .அந்தணர்கள் எண்ணிக்கை மிகக்குறைவு .அதிலும் கோவில் அர்ச்சகர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவு (அரசியல்வாதிகளுக்கு அர்ச்சகர்கள் என்றாலே அந்தணர்கள் தான் ).இவர்களின் உரிமையை பறித்து அரசியல் செய்து சமூக புரட்சியாளர்களாக காட்டிக்கொள்ளும் ஆர்வம் திராவிட அரசியல்வாதிகளுக்கு .ஹிந்துத்துவா இயக்கத்தினரின் பயம் என்னவென்றால் ,அந்தணர்களுக்கு ஆதரவு தெரிவிக்க போய் ஏனைய மக்களின் ஓட்டு போய்விடுமோ என்பது தான் .எனவே ஒப்புக்கு ஒப்பாரி வைத்துவிட்டு சென்று விடுவார்கள் .ஏதாவது போலி சாமியார் கைதானால் அதனை கண்டித்து கூடும் ஹிந்து இயக்க கூட்டம் கூட இந்த பிரச்சனைக்கு கூடாது .
4) திராவிட இயக்கங்களிலும் ஹிந்துத்துவ இயக்கங்களிலும் அந்தண வெறுப்பு நீக்கமற நிறைந்திருக்கிறது .ஹிந்துத்துவ இயக்கங்களிலுமா என்று நீங்கள் அதிர்ச்சி அடைய வேண்டாம் .கொஞ்சம் விசாரித்து பாருங்கள் .தெரியும் .அந்தணர்களை பழி வாங்குவதாக எண்ணிக்கொண்டு இவர்கள் ஹிந்து மதத்தின் அடிவேருக்கே அமிலம் ஊற்றுகிறார்கள்
அருண் ஷோரி ஒருமுறை இவ்வாறு எழுதுகிறார் :” இஸ்லாமிய படை எடுப்பு காரணமாக இந்தியாவில் பவுத்தம் ஏறத்தாழ அழிந்தது .ஆனால் பல கோவில்களை இடித்த பின்னும் ஹிந்து மதம் பிழைத்திருக்கிறது .இதன் காரணம் என்ன ?பவுத்தம் பல இடங்களில் இருந்தும் ,பல ஜாதிகளில் இருந்தும் வந்த துறவிகளை கொண்ட அடித்தளத்தை கொண்டது .துறவியாகி இருந்தால் தலை இருக்காது என்று தெரிந்த உடனேயே யாரும் புதிதாக துறவியாகவில்லை .மதமும் தேய்ந்து விட்டது .ஆனால் ஹிந்து மதத்தை பொறுத்த வரையில் அப்படி அல்ல .ஒரு அந்தண சிறுவனின் ஒட்டு மொத்த குடும்பமும் அவன் கண் முன்னே அழிக்கப்பட்டாலும் அவன் அந்தணன் ஆகவே வாழ்வான் .வேதத்தை தன் இறுதி மூச்சு வரைக்காப்பான் .இதனால் தான் ஹிந்து மதம் அழியாமல் நின்றது “. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த வாதத்தையாவது கணக்கில் கொள்ள வேண்டும் .இன்று அனைவரையும் அர்ச்சகர் ஆக்குவது எளிது .ஆனால் நாளை இந்த தொழில் லாபகரமாக இல்லை என்றால் யாரும் இதனை தேர்ந்தெடுக்க மாட்டார்கள் .பிறகு யாரை வைத்து பூஜை செய்வீர் ?அந்நிய படைகளால் கூட அழிக்க முடியாத ஹிந்து மதத்தை அழிக்கும் முயற்சியில் தான் நீங்கள் பங்காற்றுகிறீர்கள் .வெளியில் இருந்து ஆயிரம் எதிரிகள் வந்தாலும் சமாளித்து விடலாம் .ஆனால் உள்ளிருந்து ஒரு துரோகி இருந்தாலும் பெரிய வீழ்ச்சி ஏற்படும் .இதனை அனைத்து ஹிந்துக்களும் உணர வேண்டும் .
பதிவின் ஆரம்பத்தில் அந்தணர் அல்லாத அர்ச்சகர்களை குறித்து எழுதி இருந்தேன் அல்லவா .இவர்களில் பலர் இருப்பது சிறு தெய்வ கோவில்களில் .அரசும் புரட்சியாளர்களும் கோனார் கைடு பாணி புத்தகங்களை வைத்து பயிற்சி வகுப்புகளை நடத்தி அங்கிருந்து வருபவர்களை பெருந்தெய்வ கோவில்களில் நுழைக்க முயலலாம் .பெருந்தெய்வங்கள் பொறுமைசாலிகள் .ஆனால் சிறுதெய்வ கோவில்களில் இது நடக்காது .கேரள தேவசம் போர்டு அவர்கள் விருப்படி இட ஒதுக்கீடு கொடுத்து ஆட்களை கோவில்களில் நியமிக்கலாம் .ஆனால் வேட்டைகொருமகனிற்கு வெளிச்சப்பாடாக (மருளாடியாக) வர எந்த பாடசாலையும் இல்லை .வேட்டைக் கொருமகன் நினைத்தால் தான் முடியும் .நியமன உத்தரவு வாங்கி வரும் நபரால் 180 நிமிடங்களில் 12,000 தேங்காய்க்களை உட்கார்ந்தவாறே உடைக்க முடியுமா ?அதற்கு கிராத சாஸ்தாவின் பூத கணம் ஆவேசிக்க வேண்டுமே ..போர்டு உத்தரவு என்று எவனாவது வந்து அதை செய்ய முயன்றால் நடக்குக்குமா ? மக்களே சிரிப்பார்கள் .இங்கு நிர்வாக அமைப்பின் போதாமை ,அர்த்தமினமை உடனடியாக தெரிகிறது .அதாவது சாமியாடிக்கு சாமி வரவில்லை என்றால் ஸ்பஷ்டமாக தெரியும் .அர்ச்சகர் கூப்பிட்டு தெய்வம் வரவில்லை என்றால் மெல்ல தெரியும் .
மு ராஜேந்திரன் என்று ஒருவர் இருக்கிறார் .இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ;முனைவர் பட்டம் பெற்றவர் ;வரலாற்று ஆய்வாளர் ;எழுத்தாளர் .இத்தனை தகுதிகள் உள்ள நபர் ,சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறினார் ,இந்த தகுதிகள் பட்டம் ஆகியவற்றை விட பரம்பரை பரம்பரையாக தமக்கு வரும் தமது குல தெய்வ கோவிலின் பூசாரி என்ற உரிமையே முக்கியமானது என்று .பெரியசாமி கோயில் பூசாரி என்றே தாம் அறியப்பட வேண்டும் என்றும் கூறினார் .படித்தவர்கள் .பெரிய பொறுப்பில் இருந்தவர்கள் எல்லாம் விவரமாகத்தான் இருக்கிறார்கள் .அரைகுறைகள் தான் ஹிந்து மத சீர்திருத்தம் அது இது என்று உளறி திரிகிறார்கள் .

(for discussions:https://www.facebook.com/permalink.php?story_fbid=1008429815974465&id=100004223685325 )

**********************************************************************

நேற்றைய பதிவில் சுரேஷ் வெங்கடாத்ரி ஒரு ஒரு கேள்வியை கேட்டிருந்தார் .”ஒரே ஒரு கேள்வி மட்டும் முன் வைக்கிறேன்.பிறப்பால் பிராமணரல்லாத ஒருவர்,ஒரு பெருந்தெய்வ கோவிலில்,அர்ச்சகராக கைங்கர்யம்,செய்ய உண்மையான பக்தியுடன் விரும்பினால்,அதற்கு,சட்டத்தில் ஒரு வழிமுறை வேண்டாமா?” என்று .இந்த கேள்வவி பல இடங்களில் என்னிடம் கேட்கப்பட்டுள்ளது .கல்லூரியில் முதல் வருடம் படிக்கும் போது எங்களுக்கு தத்துவ பாடம் எடுத்த பேராசிரியர் ( Oxford ல் இறையியல் கல்வியை முடித்தவர்) முதல் எனது பாதிரி நண்பர்கள் வரை பலரும் பல விதங்களில் இந்த கேள்வியை கேட்டுள்ளனர் .Oxford ஆனாலும் அரசரடி கல்லூரி ஆனாலும் இந்த கேள்வி தவறாமல் வரும் .எங்கள் மதத்தில் யார் வேண்டுமானாலும் படித்து பாதிரியாராக அல்லது மௌலியாக வரலாம் .உங்கள் மதத்தில் அது நடக்குமா என்று கேட்பார்கள் .பல ஹிந்து மத செயல்பாட்டாளர்களும் இக்கேள்வியை எதிர்கொள்ள வேண்டி வந்திருக்கும் .பலருக்கும் இதற்கான பதில் சொல்வதில் கடும் பிரச்சனை இருந்திருக்கும் .ஹிந்துத்துவர்களில் பலரும் அனைவரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்பதை ஆதரிப்பதற்கு காரணமே இக்கேள்வி தான் .நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் .புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொள்ளலாம் .ஆனால் பூனையை பார்த்து புலி மியாவ் என்று கத்துவது தான் நல்லது என்று எண்ணக்கூடாது .மேற்கத்திய மதங்களை பார்த்து நாம் நம் மதத்தை சீரமைக்க கிளம்புவது பூனையை பார்த்து புலி மியாவ் என்பதை போன்றது தான் .
இனி சுரேஷின் கேள்விக்கு வருவோம் .நமது அரசு ஒரு secular அரசு .ஒருவரின் மதம் சார்ந்த விருப்பங்களை நிறைவேற்றும் பொறுப்பு அரசுக்கு இல்லை .எனவே உண்மையான பக்தனின் விருப்பத்தை பற்றி அரசு கவலைப்பட வேண்டாம் .கடவுள் பார்த்து கொள்வார் .இது முதல் பதில் .இருந்தாலும் …..என்று அடுத்த கேள்வி வரும் .நண்பர்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும் .99.99 % மக்கள் ஹிந்து மதம் வாயிலாக எதை விரும்புகிறார்கள் ?அல்லது எதை எதிர்பார்க்கிறார்கள் ? இகத்தில் தார்மீகமான சுகம் .பரத்தில் மோக்ஷம் .அவ்வளவே .இதற்காக தான் அனைத்து பிரார்த்தனைகளும் .அதை விட்டு கோயில் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று இவர்கள் யாரும் எண்ணுவதில்லை .அவர்களுக்கு தெரியும் .கோயில் அர்ச்சகர் வாழ்க்கை என்பது மிக கடினமான ஒரு பாதை என்பது .நியமங்களை சிரத்தையுடன் பின்பற்றினால் பரத்தில் சுகம் கிடைக்கும் .இகத்தில் உயிர் வாழ்வதற்கு தேவையான பொருட்கள் கிடைத்தால் பெரிய விஷயம் .நியமம் தப்பினால் இகத்திலும் பரத்திலும் துன்பம் தான் .இதனை உணர்ந்து 99.99 % மக்களும் ஏதாவது குமாஸ்தா வேலைக்கு போனாலும் போவார்களே தவிர அர்ச்சகர் வேலைக்கு வர வேண்டும் என்று ஆசைப்படமாட்டார்கள் .
அதையெல்லாம் விடுங்கள் ,அந்த .01 % நபர்கள் அர்ச்சகர்களாக ஆசைப்பட்டார்கள் என்றால் என்று கேட்கிறீர்களா ?அதற்கும் வழி உண்டே. வழியை பற்றி சொல்வதற்கு முன்னர் ஹிந்து மதத்தை குறித்த சில அடிப்படை விஷயங்களை பார்த்து விடுவோம் .ஹிந்து மதம் மறுபிறவியில் நம்புகிறது .உடல் தான் மாறும் ;ஆத்மா மாறாது என்று நம்புகிறது .இதில் குழப்பம் ஏதும் இல்லையே .மற்றொரு பக்கம் கிறிஸ்தவம் .இஸ்லாம் போன்ற மதங்கள் மறு பிறவியில் நம்புவதில்லை .ஆன்மா என்பதே அங்கு கொஞ்சம் தாமதமாக வந்த விஷயம் தான் .இரண்டாம் வருகையின் போது பிணங்கள் எழும் என்பது தான் அடிப்படை நம்பிக்கை .மனித வெடிகுண்டாக மாறும் தீவிரவாதிகள் தங்களுடைய முக்கிய உறுப்பை முக்கிய காரணங்களுக்காக சிறப்பு கவசம் இட்டு பாதுகாப்பதாக மொஸாட் சொல்வதை இவ்விடத்தில் பொருத்தி பார்த்தால் உங்களுக்கு விஷயம் தெளிவாக புரியும் 🙂.
கிறிஸ்தவ ,இஸ்லாமிய மதங்களின் நேர்கோடு கால அடிப்படையில் அவர்களில் மத போதகர்கள் / பாதிரியார் ஆக வேண்டியவர்கள் 8 வருடமோ 10 வருடமோ மத பாட சாலையில் படிக்க வேண்டும் .ஹிந்து மதத்தில் வட்ட வடிவமான கால முறை .எனவே அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற உண்மையான விருப்பம் உள்ளவர்கள் ஒரு ஜென்மம் பொறுத்திருங்கள் .சிலந்தியும் ,யானையும் பொறுத்திருந்து கோயிலே கெட்டினர் .அது தான் உங்களுக்கான நுழைவு தேர்வு .இதில் என்ன பிரச்சனை ? (இதெல்லாம் நம்புகிற மாதிரியா இருக்கு ?ஆன்மாவாம் அடுத்த ஜென்மமாம் …என்கிறவர்களுக்கு .அது தான் உங்களுக்கு நம்பிக்கை இல்லையே .பிறகு யார் கோயில் அர்ச்சகர் ஆனால் உங்களுக்கு என்ன ?) இனி யாராவது ஹிந்து மதத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக முடியுமா என்று கேட்டால் இந்த பதிலை கூறுங்கள் .மேலும் ஹிந்துமதத்தில் மனிதர்கள் மட்டும் அல்ல ,புழு பூச்சி தொடங்கி யானை வரை யாரானாலும் அர்ச்சகர் ஆக வழியுண்டு,உங்கள் மதத்தில் உண்டா என்று திருப்பி கேளுங்கள் . அடுத்தடுத்த பாகங்களில் இடது சாரி அரசின் புரட்சியா? உச்ச நீதிமன்ற உத்தரவு ,தமிழகத்தின் சிறப்பு நிலை ஆகியவை தொடரும் .

(for discussions on the post:https://www.facebook.com/permalink.php?story_fbid=1009450675872379&id=100004223685325)

*************************************************************

உச்ச நீதிமன்ற தீர்ப்பை பற்றியும் அந்த தீர்ப்பு தமிழக கோவில்களில் உள்ள status quo வை பாதிக்காது என்பதையும் ,மேலும் எவ்வாறு அந்த தீர்ப்பு பாரம்பர்ய அர்ச்சகர்களின் உரிமையை பாதுகாக்கிறது என்பதை குறித்தும் காண்போம் .முதலில் தமிழக கோவில்களில் உள்ள பல்வேறு வகையான அர்ச்சக பாரம்பரியத்தை குறித்து பார்ப்போம் .அந்தண அர்ச்சகர்களை பொறுத்த வரையில் ஆதி சைவர்கள் என்னும் சிவாச்சார்யர்கள் ,வைகானச வைணவ அர்ச்சகர்கள் ,பாஞ்சராத்ர ராமானுஜ வைணவ அர்ச்சகர்கள் ,பாஞ்சராத்ர மாத்வ வைணவ அர்ச்சகர்கள் (தந்திர சார சங்க்ரஹ வழி ),பாரம்பர்ய ஸ்மார்த்த அர்ச்சகர்கள் ,தில்லை தீட்சிதர்கள், திருச்செந்தூர் திரிசுதந்திரர்கள் ,புதிய வைதீக பிரதிஷ்டை கோவில்களில் பணிபுரியும் அந்தணர்கள் ஆகியோர் உள்ளனர் .ஆதி சைவர்கள் பல சிவ தலங்களிலும் பணி புரிந்துவருகின்றனர் .இவர்கள் சிவாகாமத்தை பின்பற்றுகின்றனர் .திருவல்லிக்கேணி உட்பட பல பழைய வைணவ தலங்களிலும் வைகாநஸர்கள் தான் அர்ச்சகர்கள் .வடகலை மற்றும் தென்கலை ஐய்யங்கார்கள் ராமானுஜ பாஞ்சராத்திரிகர்கள் .இவர்கள் ஸ்ரீ ரங்கம் உட்பட பல கோவில்களில் பாஞ்சராத்ர ஆகம முறைப்படி அர்ச்சித்து வருகின்றனர் .அதே போல மாத்வ அந்தணர்களும் பாஞ்சராத்ரத்தை மத்வர் இயற்றிய தந்திர சார சங்கிரஹத்தின் துணையோடு கைக்கொண்டு தாராபுரம்காடு ஹனுமந்த ராயர் கோவில் உட்பட விரல் விட்டு எண்ணும் அளவிற்கு உள்ள அறநிலைத்துறை கீழே வரும் அவர்களுடைய பாரம்பர்ய ஆலயங்களில் அர்ச்சித்து வருகின்றனர் .இது தவிர சுத்த பாஞ்சராத்ரிகர்கள் என்னும் பிரிவினர் 50 வருடங்களுக்கு முன்னர் கூட இருந்ததாக கேள்வி .இவர்கள் இப்பொது இருக்கிறர்களா ,இருந்தாலும் அறநிலைத்துறை கோயில்களில் அர்ச்சகர்களாக உள்ளார்களா என்பது தெரியாது .காஞ்சிபுரம் காமாக்ஷி அம்மன் கோவில் காமகோடி குடும்பம் ஸ்மார்த்த குடும்பம் தான் .க்ரோத பட்டாரக பத்ததி யை பயன்படுத்துவதாக கேள்வி .இது போலவே 1000 வருடங்களுக்கும் மேலாக சிவன் கோயில் அர்ச்சகர்களாக இருக்கும் ஸ்மார்த்தர்கள் உண்டு .தில்லை தீக்ஷிதர் ,திருச்செந்தூர் திரி சுதந்திரர் போல இவர்கள் தனி குழுவினர் .இது தவிர வைதீக பிரதிஷ்டை செய்ய பட்ட புதிய கோவில்களில் பணி புரியும் ஸ்மார்த்த அந்தணர்களும் உண்டு .கேரள எல்லை பகுதியில் உள்ள மாவட்டங்களில் அந்தணர்களால் ,குறிப்பாக நம்பூதிகள் மற்றும் போற்றி என்றழைக்கப்படும் துளு அந்தணர்களால் கேரள தாந்த்ரீக பூஜை நடைபெறுகிறது .
அந்தணர் அல்லாத அர்ச்சகர்கள் என்று எடுத்துக்கொண்டால் பண்டாரம் ,கம்பர் ,வள்ளுவர் போன்ற பூசாரி /அர்ச்சக குலத்தினர் ,ஒவ்வொரு ஜாதியிலும் உள்ள பூசாரி /அர்ச்சக மரபினர் ஆகியோர் பாரம்பரியமாக பூஜை செய்யும் கோவில்களில் சிலேதும் அறநிலைத்துறையின் கீழே வருகிறது .

ஆதி சைவ அர்ச்சகர்கள் நல சங்கம் எதிர் தமிழக அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் இறுதி பத்திகளை கீழே கொடுத்துள்ளேன் .
“…………..Consequently and in the light of the aforesaid discussion, we dispose of all the writ petitions in terms of our findings, observations and directions above reiterating that as held in Seshammal (supra) appointments of Archakas will have to be made in accordance with the Agamas, subject to their due identification as well as their conformity with the Constitutional mandates and principles as discussed above.
What then is the eventual result? The answer defies a straight forward resolution and it is the considered view of the court that the validity or otherwise of the impugned G.O. would depend on the facts of each case of appointment. What is found and held to be prescribed by one particular or a set of Agamas for a solitary or a group of temples, as may be, would be determinative of the issue. In this regard it will be necessary to re-emphasise what has been already stated with regard to the purport and effect of Article 16(5) of the Constitution, namely, that the exclusion of some and inclusion of a particular segment or denomination for appointment as Archakas would not violate Article 14 so long such inclusion/exclusion is not based on the criteria of caste, birth or any other constitutionally unacceptable parameter. So long as the prescription(s) under a particular Agama or Agamas is not contrary to any constitutional mandate as discussed above, the impugned G.O. dated 23.05.2006 by its blanket fiat to the effect that, “Any person who is a Hindu and possessing the requisite qualification and training can be appointed as a Archaka in Hindu temples” has the potential of falling foul of the dictum laid down in Seshammal (supra). A determination of the contours of a claimed custom or usage would be imperative and it is in that light that the validity of the impugned G.O. dated 23.05.2006 will have to be decided in each case of appointment of Archakas whenever and wherever the issue is raised. The necessity of seeking specific judicial verdicts in the future is inevitable and unavoidable; the contours of the present case and the issues arising being what has been discussed…….
Consequently and in the light of the aforesaid discussion, we dispose of all the writ petitions in terms of our findings, observations and directions above reiterating that as held in Seshammal (supra) appointments of Archakas will have to be made in accordance with the Agamas, subject to their due identification as well as their conformity with the Constitutional mandates and principles as discussed above..”
என்றவாது ஒரு நாள் மீண்டும் அரசியல் சாசன அமர்வில் அடுத்தகட்ட சட்ட போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஒருவேளை ஏற்பட கூடும் .இந்த தீர்ப்பில் உள்ள சில விஷயங்களை பகுதியை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை அன்று பார்ப்போம் .இப்போது இந்த தீர்ப்பு நமக்கு தரும் அனுகூலங்களை பார்ப்போம் .
1)முதலில் ஹிந்து விரோத தி மு க அரசு வெளியிட்ட “அனைத்து ஹிந்துக்களும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையை உச்ச நீதிமன்றம் செல்லாது என்று கூறிவிட்டது.
2) மேலும் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு ஆகமம் என்று இருப்பதை சுட்டிக்காட்டி விட்டது
3) ஒவ்வொரு கோவில் விஷயத்திலும் வழக்கு வருவதை தவிர்க்க முடியாது என்று சொல்லி விட்டது .
4) “appointments of Archakas will have to be made in accordance with the Agamas” என்று கூறிவிட்டது .இதன் பொருள் என்ன ? அரசாங்கம் ஒரு பள்ளியை வைத்து கோனார் நோட்ஸ் போட்டு பாடம் எடுப்பது செல்லாது என்று கூறிவிட்டது
5) வைகாநஸர்களுக்கு பிரச்சனையே இல்லை .வைகானச ஆகம நூற்கள் தெரிந்தவர்கள் அவர்களை தவிர வேறு யாரும் இல்லை
6) மாத்வர்கள் எண்ணிக்கையிலும் குறைவு .எனக்கு தெரிந்து தமிழ் நாட்டில் அந்தணர் அல்லாத மாத்வர்கள் ,இந்த கட்டுரை ஆசிரியரையும் சேர்த்து ,மூன்று பேர் தான் உள்ளனர் .அவர்கள் எக்காலத்திலும் கருவறைக்குள் நுழைய முயற்சிக்க போவதில்லை
7) சிவாச்சாரியர்களுக்கும் பிரச்சனை இல்லை .எப்படி ?சிவாகமம் ஒன்றல்ல ;பல.ஒரே கோவிலில் மூன்று வெவ்வேறு ஆகம முறைகளை பின்பற்ற வேண்டிய பின்னணி உள்ள கோவில் கூட தமிழகத்தில் உள்ளதாக கேள்வி .காரண ஆகமத்தில் பயிற்சி பெற்றால் அந்த ஆகமம் புழங்கும் கோவில்களுக்கு தான் செல்ல முடியும் .மகுடாகமம் எனில் அந்த கோவில்களுக்கு மட்டுமே .காமிகம் என்றால் அத்தகைய கோவில்களுக்கு மட்டும் தான் செல்ல முடியும் .Super specialization 🙂 .அரசால் ஒரு போதும் இவ்வாறு நுட்பமாக விரித்து,பிரித்து பயிற்சி அளிக்க முடியாது
8) பாஞ்சராத்ரத்திலும் அப்படியே .பத்ம சம்ஹிதை பயிற்சி என்றால் அந்த சம்ஹிதையின் கோவிலில் மட்டும்தான் செல்ல முடியும் .
9) தில்லை வாழ் அந்தணர்கள் தனி denomination .அங்கு எந்த பருப்பும் வேகாது .
10) க்ரோத பட்டாரக பத்தியை கண்ணால் பார்த்தவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள் ? இதுபோலத்தான் இதர இடங்களிலும் .எனவே பாரம்பர்ய ஸ்மார்த்தர் இருக்கும் இடங்களிலும் பிரச்சனை இல்லை .
11) திரிசுதந்திரர்கள் போன்றவர்கள் ஒரு தலத்தோடு பாரம்பர்ய தொடர்பு உடையவர்கள் .அவர்களை மாற்றுவதும் கடினமே
12) தமிழகத்தில் உள்ள கேரள தந்த்ர கோவில்களில் பூஜை செய்ப்பவர்களுக்கு நம் தேவசம் போர்ட் 500 முதல் 1500 வரை சம்பளம் நிர்ணயித்துள்ளனர் .காலை 4 மணி முதல் 11.30 வரை ,பிறகு மலை 4.00 முதல் 8.00 வரை .இந்த தியாகத்திற்கு யாரும் தயாராக மாட்டார்கள் .மேலும் ஒவ்வொரு கோவிலிலும் அந்த கோவிலின் தந்திரி சான்றிதழையும் அளிக்க வேண்டும் .இங்கும் பிரச்சனை இல்லை
13) சிறு தெய்வ கோவில்களில் கை வைத்தால் ஓட்டு போகும் என்று எல்லா அரசிற்கும் தெரியும் .போதாக்குறைக்கு பெருந்தெய்வங்கள் விட்டாலும் விடும் ஆனால் சிறு தெய்வங்கள் இரண்டில் ஒன்றை பார்த்துவிடும் என்பது நம் அரசியல்வாதிகளுடைய நம்பிக்கை .ஆகவே அங்கும் பிரச்சனை இல்லை
14) புதிய வைதீக ஸ்மார்த்த பூஜை நடப்பது புதிய கோவில்களில் தான் .அங்கு அறநிலைத்துறை எளிதில் வரமுடியாது .
ஆக இங்கு status quo தான்

For discussions on the post:https://www.facebook.com/permalink.php?story_fbid=1012011532282960&id=100004223685325

Advertisements

நீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 3

அரசுப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்
தற்போதைக்கு நல்ல கல்வி நிறுவனங்களை அமைக்க முடியாதவர்களுக்கு இருக்கும் ஒரே தேர்வு அரசு பள்ளிகள் மட்டும் கல்லூரிகள் தான் .அரசு கல்விநிறுவனங்கள் என்றாலே பலரும் முகம் சுளிப்பார்கள் .ஆனால் நாம் மற்றொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.பலரும்,தனியார் பள்ளிகளில் ,அதிலும் கோழிப்பண்ணை பாணி பள்ளிகளில் பல் லகரங்கள் கொடுத்து தாங்களும் கஷ்டப்பட்டு தங்கள் குழந்தைகளையும் கொடுமைப்படுத்துவது அரசு பொறியியல் கல்லூரி அல்லது அரசு மருத்துவ கல்லூரியில் தங்கள் குழந்தைகள் சேர வேண்டும் என்பதால் தான் .அரசால் நடத்தப்படும் உயர்கல்வி நிறுவனங்கள் என்றல்ல ;மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பல பெற்றோர்களும் அதி ஆர்வமாக உள்ளனர் .முன்னர் எம்பிக்களுக்கு எதோ கோட்டா இருந்ததாக நினைவு .அந்த கோட்டாவை பயன்படுத்திக்கொள்ள பலரும் அலைந்து திரிவார்கள் .ஆக ,அரசால் ஓரளவிற்கு தரமான கல்வி நிறுவனங்களை உருவாக்கவும் நடத்தவும் முடியும் என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட விஷயம் .அத்தகைய நிறுவனங்களில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதில் பெற்றோர்களுக்கும் பிரச்சனை இல்லை .ஏன் கேந்த்ரா வித்யாலயா நன்றாக இருக்கிறது? ஏன் அரசு பள்ளிகளில் அந்த அளவிற்கு தரம் இல்லை ?என்று நாம் யோசிக்கவேண்டும் .கேவிக்கள் எந்த விதமான நுழைவு தேர்வு/தரவரிசை பட்டியலும் இல்லாமல் தான் மாணவர்களை சேர்க்கின்றனர் .மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை .மத்திய அரசு ஊழியர் என்றால் அடிமட்ட ஊழியர்களில் இருந்து இந்திய ஆட்சி பணி அதிகாரி அனைவரும் அடக்கம் .ஆகவே அவர்கள் நன்றாக படிக்கும் ,வசதியான மாணவர்களை மட்டும் தேடிப்பிடித்து எடுக்கவில்லை என்பது தெளிவு .மத்திய அரசின் பள்ளிகளுக்கும் மாநில அரசின் பள்ளிகளுக்கும் இடையே உள்ள பெரிய இடைவெளியை சீர் செய்ய வேண்டியது அவசியம் .நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் .மாநில அரசு பள்ளிகளுக்கான பொற்காலங்களும் இருந்தன .உதாரணத்திற்கு நாகர்கோவில் எஸ் எல் பி பள்ளியில் ஆறாம் வகுப்பில் மட்டும் 10 பிரிவுகள் இருந்தகாலம் இருந்தது .இருபது வருடங்களுக்கு முன் ,அங்கே ,மாணவர்கள், ஆறாம் வகுப்பில் சேர நுழைவு தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று தர வரிசை பட்டியலில் வரவேண்டும். அந்த நுழைவு தேர்விற்கென்று தனி பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் இருந்தனர் 🙂.ஒருஆறாம் வகுப்பு சீட்டிற்காக முதல்வர் அலுவலுகத்தில் இருந்து சிபாரிசு வந்த கதையை எல்லாம் அப்பள்ளியின் ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் என்னிடம் கூறி உள்ளார் .நான் இன்று குறிப்பிடுவது ஒரு உதாரணம் மட்டும் தான் .இது போல தமிழகம் எங்கும் கொடிகட்டி பறந்த அரசு பள்ளிகள் இருந்தன .இன்றோ ,எப்படியாவது குறைந்தபக்ஷ எண்ணிக்கை மாணவர்களை கணக்கில் காட்டி இட மாறுதலில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதே பல தமிழகத்தில் உள்ள பல அரசு பள்ளி ஆசிரியர்களின் கவலை .பிரச்சனை எங்கிருந்து தொடங்கியது ? 1) தமிழகம் எங்கும் காளான்களை போல முளைத்த தனியார் ஆசிரியர் கல்லூரிகள் 2) அவற்றில் பெரும் பணம் கொடுத்து படித்து மேலும் பணம் கொடுத்து வேலை ,இடமாற்றம் ஆகியவற்றை வாங்க தயாராக உருவான ஒரு தலைமுறை 3) வகுப்பில் மிகச்சிறந்த மாணவன் ஆசிரியர் பணிக்கு போவான் என்ற நிலை மாறி வகுப்பில் படிக்கவே படிக்காத சோம்பேறிக்கான வேலை ஆசிரியர் வேலை என்ற எண்ணம் 4) வலுவான ஆசிரியர் சங்கங்கள் ஏறத்தாழ ஒரு சிண்டிகேட் போல செயல்பட தொடங்கியதில் விளைவு 5) தேர்தல் பணியில் ஈடுபடும் இவர்களை பகைப்பது ஆபத்து என்ற எண்ணம் கொண்ட அரசுகள் .
இந்த பிரச்னைகளை ஒரே நாளில் சரி செய்து விட முடியாது .முதலில் ஆசிரியர் பணிக்கு லைசென்சிங் முறையை கொண்டு வர வேண்டும் .அரசு பள்ளியோ தனியார் பள்ளியோ ,மூன்று வருடங்களுக்கு ஒருமுறை, கற்பித்தல் தொடர்பான பாடங்கள் ,அவர்களது சிறப்பு தகுதி பாடங்கள் இவற்றில் பரீட்சை எழுதி தேர்ச்சி அடைந்தால் மட்டுமே அடுத்த மூன்று வருடங்களுக்கு பாடம் எடுக்க முடியும் என்பதை சட்டமாக்க வேண்டும் .வருடத்தில் ஒருமுறை மனநல பரிக்ஷையும் செய்ய வேண்டும் . இது பாதி பிரச்னையை தீர்த்து விடும் .முக நூல் போராளிகள் தங்கள் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சென்று அங்குள்ள பெற்றோர் ஆசிரியர் கழகம் வழியாக எதாவது நல்ல காரியத்தில் ஈடு பட முடியுமா என்று பார்க்கலாம் .பைசா செலவு இல்லாத சில காரியங்கள் உண்டு .உதாரணத்திற்கு ,ஒழுங்காக பள்ளிக்கு வராத ஆசிரியர்களை குறித்து மாவட்ட ஆட்சி தலைவருக்கு புகார் கடிதம் அளிக்கலாம் .மேலும்,ஆசிரியர்களுக்கு கற்றல்,கற்பித்தல் அல்லாத வேறு எந்த பணியிலும் ஈடு படுத்தக்கூடாது .மூன்று வருடங்களுக்கு மேல் அவர்களை நிர்வாக பணிக்கு அனுப்பக்கூடாது
சில வேளைகளில் ,பள்ளி கல்வியை சரி செய்கிறேன் என்று இறங்கும் அதிகாரிகள் அதனை இன்னும் சீரழிகின்றனர் .அது குறித்து அடுத்த பதிவில் .

சில பல திரைப்படங்களை பார்த்துவிட்டோ ,விளம்பர ஆசையாலோ ஆழமற்ற ,முதிரா ஆதர்சங்களை கையோடு கொண்டு வரும் அதிகாரிகளை போல கல்வி துறையை சீரழிப்பவர்கள் யாரும் இல்லை .தமிழகத்தில் சில கல்வி துறை அதிகாரிகளும் ,இந்தியா ஆட்சி பணி அதிகாரிகளும் இத்தகைய கேடுகளை செய்வது மட்டும் இல்லாமல் அதனை ஒரு சாதனையாகவும் கருதுவார்கள் .கல்வி குறித்து எந்த அடிப்படை தெளிவும் இல்லாத திருவாளர் பொதுஜனமும் இவர்களுக்கு பேனர் வைத்து கொண்டாடுவார்கள் .அரசியல் ரீதியாக சரியாக இல்லாமல் இருக்கலாம் ;ஆனால் உண்மை என்னவென்றால் ஒரு சாதாரண வகுப்பில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சியடைய மாட்டார்கள் என்பது தான் .100 சதவீதம் மதிப்பெண் பெறும் மாணவன் ஒருவனாவது இருப்பான் .அதே போல 30 சதவீதம் மதிப்பெண் பெறும் மாணவன் ஒருவனும் இருப்பான் .மாணவர்களுக்கு பிரச்சனை புரிந்து கொள்வதில் என்றால் ,அதனை ஓரளவிற்கு தான் வகுப்பறையில் வைத்து சரி செய்ய முடியும் .மெல்ல படிக்கும் மாணவன் (slow learner ) எனில் வீட்டில் பெற்றோர்கள் அக்கறை எடுத்து ஓரளவிற்கு இதனை சீர் செய்யலாம் .இல்லாவிட்டால் கூட ஒருவருடம் ஆகத்தான் செய்யும் .இதில் பெரிய தவறு ஏதும் இல்லை .இத்தகைய மாணவ்ர்களை சராசரி மாணவர்களின் வேகத்தில் படிக்க சொல்வது மிகப்பெரிய கொடுமை.இதனை பெற்றோர்களும் அதிகாரிகளும் புரிந்துகொள்ள வேண்டும் .ஆசிரியர் பாடம் ஒழுங்காக எடுக்காமல் இருந்தால் அவர் மேல் கடும் நடவடிக்கை எடுக்கலாம் .ஆனால் தேர்ச்சி விகிதத்தை வைத்து ஒரு ஆசிரியரின் மேல் நடவடிக்கை எடுப்பது என்பது மிகப்பெரிய தவறு .இந்த விகிதத்தை கையில் எடுத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர்களும் ஆசிரியர்களை தொல்லை செய்ய தொடங்கும் போது அவர்களும் சில பல குறுக்கு வழிகளில் ஈடுபட தொடங்குவார்கள் .திறன் என்பதை கை கழுவி விட்டு தேர்ச்சி என்பதற்கு முழு முக்கியத்துவம் கொடுக்க தொடங்குவர் .உதாரணத்திற்கு ஒரு பத்தியை மூன்றில் ஒரு பங்காக சுருக்கும் வினா இருக்கும் .அவ்வாறு சுருக்கும் திறன் எத்தனை முக்கியம் என்பது நமக்கு தெரியும் .ஆசிரியர்களுக்கும் தெரியும் .ஆனால் மதிப்பெண் மட்டுமே முக்கியம் என்னும் நிலை வந்தால் திறனை கைகழுவி விட்டு குறுக்கு வழியை காட்டி கொடுத்துவிடுவார்கள்.ஒரு வரிக்கு ஒரு வரியை விட்டு எழுத சொல்லிக்கொடுப்பார்கள் .கதை முடிந்தது .ஒரு வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் அந்த திறன் இல்லாமல் போகும் .இது ஒரு சிறு உதாரணம் தான் .எத்தனையோ சொல்லலாம் .பள்ளியாக இருந்தாலும் கல்லூரியாக இருந்தாலும் target வைத்தால் நிலவரம் இது தான் .பெற்றோர்களும் ,அதிகார வர்க்கத்தினரும் இதனை புரிந்து கொள்ள வேண்டும் .அனைவருக்கும் 100 மதிப்பெண்,அனைவரும் தேர்ச்சி பெறுதல் என்பது நடைமுறையில் பெருங்கேடு .

உயர் கல்வியை பொறுத்தவரையில் நான் மீதும் மீண்டும் கூறும் விஷயம் என்னவென்றால் ஒரு மாணவன் விருப்பப்படுவதை படிப்பதற்கான வழியை காட்டுங்கள் என்பது தான் .அதனை பெரும் மருத்துவம் படிக்க விருப்பப்பட்டால் அதனை செய்ய முடியுமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது .உண்மைதான் .அத்தனை மாணாக்கருக்கு ஓன்று மருத்துவம் அல்லது பொறியியல் படிக்க ஆசைப்படுகிறார்கள் .இந்த ஆசை இயல்பாக ,அவர்களது அடிப்படை ஆர்வம் சார்ந்து உருவானது அல்ல .சற்று விளக்குகிறேன் .இருபது வருடங்களுக்கு முன்பு கூட ஒரு பள்ளிக்கூடத்திற்கு சென்று ஆறாம் வகுப்பு அல்லது ஏழாம் வகுப்பு மாணவ மாணவியரிடம் சென்று உங்கள் எதிர்கால லக்ஷியம் என்னவென்று கேட்டால் ,அதற்கான பதிலில் மருத்துவம் ,பொறியியல் ,சட்டம் ,காவல்துறை ,ராணுவம் ,ஆசிரியப்பணி என்று ;ஏராளமான பதில்கள் கிடைக்கும் .அனால் இன்று அதே கேள்வியை கேட்டால் பொறியியல் அல்லது மருத்துவம் என்ற இரண்டு பதில்கள் மட்டும் தான் கிடைக்கும் .ஆசிரியர் பணி போன்றவற்றை எந்த குழந்தையும் பதிலாக கூறாது .காரணம் என்ன ?சமூகம் மருத்துவம் மற்றும் பொறியியல் ஆகியவற்றை மட்டுமே சிறப்பான தொழில்களாக காண்கிறது .இதன் காரணமாக ஏனைய துறைகளில் ஆர்வம் உடைய குழந்தைகள் கூட இந்த இரண்டு துறைகளை நோக்கி பயணப்பட வேண்டி உள்ளது .இத்துறைகளால் நிராகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே ஆசிரியர்களாகவோ ,செவிலியர்களாகவோ வருவார்கள் எனில் அது சமூகத்திற்கும் நல்லது இல்லை .எனவே பொருளாதார அடிப்படைகளை கணக்கில் கொள்ளாமல் ,சமூக மதிப்பை பற்றி கவலைப்படாமல் ஒரு குழந்தை தனது ஆர்வத்தை மட்டுமே கணக்கில் கொண்டு தனக்கான பாதையை உருவாக்க நாம் வழி செய்ய வேண்டும் .ஒரு தமிழ் கவிஞர் தனது நினைவு குறிப்புகளில் எழுதி இருந்தார் .+2 வில் நல்ல மதிப்பெண் பெற்ற அவர் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தை விருப்பப்பாடமாக எடுக்க முயன்றபோது அதற்க்கு தடையாக இருந்தது வேறு யாரும் இல்லை ;அக்கல்லூரியின் முதல்வர் தான் .வலுக்கட்டாயமாக அவரது மதிப்பெண்களுக்கு ஏற்ற ஒரு விஞ்ஞான பாடப்ப்பிரிவில் சேர்க்கப்பட்டார் .கன்னட எழுத்தாளர் பைரப்பாவிற்கு இது போன்ற ஒரு அனுபவம் ஐம்பது வருடங்களுக்கு முன் ஏற்பட்டுள்ளது .அவர் தத்துவத்தில் இளங்கலை சேர செல்லும் பொது அத்துறையின் தலைவரே தத்துவ படிப்பு வயிற்றை நிரப்ப உதவாது என்று கூறி அவரை ஊக்கமறுக்க முயல்கிறார் .அன்று “வயிற்றை நிரப்ப எனக்கு ஆயிரம் வழிகள் தெரியும் .வாழ்வு ,மரணம் போன்றவற்றின் பொருளை அறியவே தத்துவம் கற்க வந்துள்ளேன்” என பைரப்பா பதிலுரைத்தார் .விடாப்பிடியாக தத்துவம் கற்றதால் அவருக்கு மட்டும் அல்ல இந்திய இலக்கிய உலகிற்கும் பல நன்மைகள் வந்தன .ஒரு நிமிடம் யோசித்து சொல்லுங்கள் .உங்களுக்கு தெரிந்த வட்டத்தில் இளங்கலை தத்துவம் படிக்க வேண்டும் என்று கூறும் =2 மாணவர்கள் யாரவது உண்டா ? (இளங்கலை தத்துவம் தமிழகத்தில் சில கல்லூரிகளில் உண்டு .அங்கு சில மாணவர்களை எப்படியோ பிடித்து வகுப்புக்களையும் நடத்துகிறார்கள் ).தத்துவ படிப்பில் ஈடுபாடுடைய பதின்ம வயதினர் இல்லை என்றல்ல இதற்கு பொருள்.அத்தகைய விருப்பத்தை கூறுபவர்களை நாம் மனநல விடுதிக்கு அனுப்ப தயாராக இருக்கிறோம் என்பதால் யாரும் இது போன்ற ஆர்வங்களை உரத்து சொல்வதில்லை .அதன் விளைவு பெரும் கேடு. ஆர்வம் எத்துறையில் இருப்பது என்பதை எப்படி கண்டுபிடிக்க என்ன வழி ?

ஐரோப்பாவிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் வருடத்திற்கு ஒருமுறை மாணவர்களின் பெற்றோர்கள் (அவர்கள் இரண்டாம் வகுப்போ மூன்றாம் வகுப்போ படிக்கும் போது ) வகுப்பறைக்கு ஒவ்வொருவராக வந்து தங்கள் வேலையை குறித்து மாணவர்களுடன் உரையாட ஊக்குவிக்கப்படுகிறார்கள் .இதில் உயர்ந்த வேலை தாழ்ந்த வேலை என்ற பாகுபாடு கிடையாது .இந்த உரையாடல்கள் வாயிலாக குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே ஒரு பல்வேறு துறைகளை குறித்த ஒரு சித்திரம் கிடைக்கிறது .பிறகு ஒரு standardized career aptitude test ஒன்பதாம் வகுப்பிலோ பத்தாம் வகுப்பிலோ நடத்தப்படுகிறது .Career counselor ன் உதவியுடன் ஒவ்வொரு மாணவனும் ஒரு துறையை தேர்ந்தெடுக்கிறான் .இந்திய சூழ்நிலை வேறு .பெற்றோர்கள் உற்றோர் உறவினர் ஆசிரியர்கள் தெருவில் போகிறவர்கள் உட்பட அனைவரும் ஒரு பள்ளி மாணவனுக்கு எத்துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உபதேசம் செய்கிறார்கள் .சுருக்கமாக சொல்ல வேண்டும் எனில் career counselor ஐ தவிர அனைவரும் புகுந்து விளையாடுகின்றனர் .முதலில் இந்த அராஜகத்தை நிறுத்த வேண்டும் .இந்த ஆலோசனைகள் அனைத்தும் எந்த துறையில் அதிகம் வேலைவாய்ப்பு உள்ளது /பணம் பண்ண வழி உள்ளது என்பதை மய்யமாக வைத்துதான் வரும் .இப்படி பணத்தை அடிப்படையாக கொண்டு வழிகாட்டினால் ,பணம் சம்பாதிப்பதை மட்டுமே லட்சியமாக கொண்டு மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் நுழைந்தால் ,பிறகு ஒரு கிட்னியை அல்ல இரண்டு கிட்னியையும் திருட என்ன வழி என்று யோசிக்கும் மருத்துவர்களே நகரெங்கிலும் நிறைந்திருப்ப்பார்கள் .அதனை வைத்து படம் எடுத்து பணம் சம்பாதிக்கும் நடிகனாலோ ,இயக்குனராலோ அடிப்படையை சரி செய்ய முடியாது .பொருளாதார நலன்களை அடைவதற்கான வழியாக கல்வியை நினைக்கவே கூடாது .ஆனால் இன்று அரசாங்கம் தொடங்கி பொது ஜனம் வரைக்கும் அனைவரும் வருமானம் தரும் கல்வி வேண்டும் என்கிறார்கள் .இது மிகப்பெரிய அற வீழ்ச்சி மட்டும் அல்ல சமூகசமநிலையை குலைக்கும் செயலும் கூட .அறம் தத்துவம் என்றெல்லாம் பேசினால் நம்மவர்கள் நமுட்டு சிரிப்பை காட்டி சென்று விடுவார்கள் .எனவே அவர்களுக்கு புரியும் மொழியிலேயே சொல்லுகிறேன்.உங்கள் சக இந்தியர்களும் உங்கள் அளவிற்கு புத்திசாலிகளாகவோ /முட்டாள்களாகவோ தான் இருப்பார்கள் .எனவே அவர்களும் வருமானம் தரும் கல்வியை தான் தங்கள் குழந்தைகளுக்கு தேர்ந்தெடுப்பார்கள் .இப்படி அனைவரும் ஓரிரு படிப்புகளில் சென்று குவிவதால் லாபம் அடைவது கல்வி தந்தைகள் மட்டுமே .கூட்டம் அதிகமாக அதிகமாக தரம் குறையும் .வேலை சந்தையில் saturation ஏற்பட்டு கூட்டதோடு பிச்சை எடுக்க வேண்டியது தான் .அதனையும் ஒருவன் வேலை இல்லா பட்டதாரி என்று படம் எடுத்து பணம் பண்ணுவான் .
இயற்கை அதன் வசம் ஒரு சமன்பாட்டினை வைத்துள்ளது .இவ்வுலகிற்கு தேவையான திறன் உள்ளவர்களை அத்துறைகளில் ஆர்வம் உள்ளவர்களாக அது சமமாக படைத்தது வருகிறது .அதில் புகுந்து குழப்பம் ஏற்படுத்தினால் அனைவருக்கும் கஷ்டம் தான் .இந்த சமன்பாட்டை அற்ப மானிட அறிவைக்கொண்டு வளைக்க நின்றதின் விளைவை தான் இன்று பார்க்கிறோம் .வங்கி குமாஸ்தா வேலைக்கு பொறியியல் பட்டதாரிகள் போட்டி இடுகிறார்கள்.நீதிமன்றத்தில் உதவியாளர் பணிக்கு முனைவர் பட்டம் படித்தவர்கள் மல்லுக்கட்டுகிறார்கள் .முனைவர் பட்டம் பெற்றவர்கள் இந்த பணிக்கு வரக்கூடாது என்பதல்ல நமது வாதம் .கல்வியையும் பிழைப்பையும் பொருளாதார அடிப்படையில் தொடர்புபடுத்தி .முடிவெடுக்க கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.இங்கு இத்தகைய நபர்களை சுட்டிக்காட்ட காரணம் என்னவென்றால் பணம் ஒன்றை மட்டுமே குறியாக வைத்து செயல்படுவது எத்தகைய விளைவை தரும் என்றுகூறத்தான் .இந்த நபர்கள் எந்த வித ஈடுபாடும் இல்லாமல்,அறமும் இல்லாமல் பணிக்கு வருவதால் அதனை உருப்படியாக செய்யவும் மாட்டார்கள் .
மருத்துவர்களின் கதியும் இது தான் .மருத்துவ தொழில் தரும் பணம் சமூக மதிப்பு ஆகியவற்றால் உந்தப்பட்டு ,அடிப்படை ஆர்வம் இல்லாமல் ,ராணுவ ஒழுங்குடன் !!!??? ஒரு நாளைக்கு 19 மணி நேரம் படித்து +2 தேர்வு,நுழைவு தேர்வு ,மருத்துவ கல்லூரி தேர்வு போன்றவற்றில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தவர்கள் பலர் இன்று நடுத்தெருவில் நிற்கிறார்கள் .மருத்துவ மேற்படிப்பில் நுழைய வேண்டும் எனில் இவர்கள் பாணியில் ஒரு நாளைக்கு 26 மணிநேரம் படிக்க வேண்டும் .சொந்தமாக தொழில் செய்யும் திறமையும் இல்லை .தனியார் மருத்துவமனையில் சென்றால் மாதம் 10,000 என்று பேரத்தை தொடங்குவார்கள் .வேண்டா வெறுப்பாக அரசு மருத்துவ துறையில் இணைதல் மட்டுமே இவர்களுடைய விதியாக ஒருகாலத்தில் இருந்தது .இப்போது மற்றொரு வழியையும் கண்டுபிடித்துள்ளனர் .பழைய பாணியில் மனப்பாடம் செய்து இந்திய ஆட்சி பணியில் சேருதல் என்பது தான் அந்த புதிய வழி .மிச்சம் இருப்பவர்கள் மருத்துவ கொள்ளைக்கு தயாராகின்றனர் .(கோடி கணக்கில் கொடுத்து சேர்ப்பவர்கள் தனி .அவர்களை குறித்து நாம் பேசவில்லை .கொள்ளை அடிப்பது அவர்களுக்கு கல்லாமல் பாகப்படும் ).கொள்ளை அடிக்கும் துணிவு இல்லாத சிலர் தங்களை தாங்களே திருமணம் எந்த பெயரில் விற்று கொள்கின்றனர் .இதற்கு நேர் மாறாக ,ஆர்வத்துடன் ,ஆர்வத்தின் காரணத்தினால் மட்டும் மருத்துவர் ஆனவர்கள் நோய் நீக்குதல் தரும் ஆனந்தத்தினால் இந்திய திபெத் எல்லை கிராமத்தில் கூட மகிழ்ச்சியோடு வசிக்கின்றனர் .ஒவ்வொரு நாளையும் ஆர்வமாக எதிர்கொள்கின்றனர் .ஒவ்வொரு நொடியும் புதிதாக எதையாவது கற்று கொள்ள முயல்கின்றனர் .இவர்கள் கசப்படைவதில்லை .இவர்களுக்கு பொது மக்கள் இடையிலும் தனியார் மருத்துவமனைகள் இடையிலும் கூட நல்ல வரவேற்பு இருக்கிறது .
சமீபத்தில் ஒரு நண்பரின் மகள் என்னை காண வந்தார் .அந்த மாணவிக்கு மருத்துவம் படிக்க விருப்பம் .தந்தையும் படிக்க வைக்க தயார் தான் .ஆனால் இருவருக்கும் ஒரு சந்தேகம்.மருத்துவம் படிப்பதற்கான அடிப்படை பண்பு உள்ளதா என்று .அன்று தான் மரு .ரோஹிணி கிருஷ்ணனின் ஒரு பதிவை பார்த்தேன் .அவர் கண் மருத்துவர் .அவருடைய மருத்துமனைக்கு அவர் OP பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு நபரை கொண்டுவந்திருக்கின்றனர் .அவர் அருகில் இருந்த லாரி ஒன்றின் டயர் வெடித்துள்ளது .அதில் நூற்றுக்கணக்கான துகள்கள் அவரது கண்ணில் பாய்ந்துள்ளது .மரு .ரோஹிணி காத்திருந்த OP நோயாளிகளை போகச்சொல்லி விட்டு சுமார் எட்டு மணிநேரம் முயன்று 98 சிறு துகள்களை அவரது ஒரு கண்ணில் இருந்து மட்டும் நீக்கியுள்ளார் .மிக கடினமான Foreign object removal .லக்ஷங்கள் போகட்டும் ,ஆயிரம் ரூபாய் கூட அந்த நபரிடம் இருந்து வராது என்று தெரிந்தே செய்தார் .OP வருமானம் நஷ்டம் .கட்டாயம் கடும் முதுகு வலியும் ,கழுத்து வலியும் ஏற்பட்டிருக்கும் .ஒரு நபரின் பார்வையை காப்பாற்றி விட்டோம் என்ற திருப்தி மட்டுமே மிச்சம் .நான் இந்த பதிவை அந்த பெண்ணிற்கு வாசிக்க கொடுத்தேன் .பணம் ,சமூக மரியாதை ஆகியவற்றை விட அந்த திருப்தி முக்கியம் என்ற எண்ணம் அவளுக்கு இருக்கிறது எனில் மருத்துவம் படிக்கலாம் என்பது என் கருத்து என்று கூறினேன் .

************************************************

நீட் 13
இன்னும் சொல்ல எவ்வளவோ இருக்கிறது .ஆனால் தொடர பொறுமை இல்லை .இந்த பகுதியுடன் இப்போதைக்கு முற்றும் போட்டு விடலாம் என்று இருக்கிறேன்.
1) பொருளாதார வளத்தையும் கல்வியையும் இணைத்து பார்காதீர் .ஏமாற்றமே மிஞ்சும்.இந்த வருடம் வாழைக்காய்க்கு அமோக விலை என்று எண்ணி அனைத்து விவசாயிகளும் வாழை விவசாயத்தில் இறங்கினால் அடுத்த வருடம் வாழைக்காய்களை /பழங்களை ரோட்டில் தான் கொட்ட வேண்டும் .இதே கதை தான் கல்விக்கும்
2) மாறாக ஒவ்வொரு மாணவனுக்கும் எதில் விருப்பமும் திறமையும் இருக்கிறதோ அதனை தேர்ந்து எடுக்க ஊக்குவியுங்கள் .விருப்பம் என்பது ஆழ்மனதில் இருந்து வரவேண்டும் .புறக்காரணிகளால் வரக்கூடாது .
3) விருப்பப்பட்ட கல்வியை கற்பதற்காக ஒன்றிரண்டு ஆண்டுகள் காக்க வேண்டி இருந்தாலும் பதற்றப்படக்கூடாது .மூன்று  கலை மற்றும் அறிவியல் துறைகளில் முதுகலை பட்டமும் ஒரு துறையில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்று ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்யும் போது தான் பால் கலாநிதி மருத்துவம் கற்க முடிவு செய்கிறார் .அதன் பிறகு Yale பல்கலைக்கழகத்தில் வெற்றிகரமாக மருத்துவ படிப்பில் சேர்ந்து உயர் மதிப்பெண்களுடன் 30 வயதில் அதனை முடிக்கிறார் .பிறகு நரம்பியலில் சிறப்பு பட்டமும் பெறுகிறார் .இத்தகைய ஒரு சூழல் இந்தியாவில் வர வேண்டும் .பல்கலைக்கழகங்களும் மருத்துவ கல்வி போன்றவற்றிற்கு வயது வரம்பு வைப்பதை நிறுத்த வேண்டும் .
4) மருத்துவம் படிக்க விரும்பும் மாணவ மாணவியர் படித்தால் MBBS  இல்லாவிட்டால் சுடுகாடு என்ற எண்ணத்தை விடவேண்டும் .நோய் தீர்த்தல் உங்கள் லட்சியமாக இருக்கும் எனில் ஆயுர்வேதம் ,சித்தமருத்துவம் போன்றவற்றை தேர்வு செய்ய தயக்கம் என்ன ?என் நினைவு சரி எனில் அந்த படிப்புகளுக்கு வயது உச்ச விரும்பும் கிடையாது .
5) பெற்றோர்களுக்கு : உங்கள் குழந்தைகளை கோழிப்பண்ணை பள்ளிகளுக்கு அனுப்பி அவர்கள் மூளையை மழுங்கடிக்க செய்வதின் மூலம் நீங்கள் உங்கள் வம்சத்திற்கும் இந்திய திரு நாட்டிற்கும் பெரும் கேட்டினை செய்கிறீர்கள் .இத்தகைய மாணாக்கர் பலருக்கு critical thinking ability இருப்பதில்லை .அதனாலேயே அறம் ,அரசியல் நிலைப்பாடு என்று அனைத்தும் அவர்களிடம் இல்லாமல் போகிறது.
6) மருத்துவர் ஆவதற்கான அடிப்படை திறமை மற்றும் மனநிலை இல்லாதவர்கள் மருத்துவர் ஆனால் மக்கள் தொகை குறையுமே தவிர்த்து வேறு பயன்கள் ஏதும் இராது
7) அரசு கடும் சட்ட விதிகளுடன் ,தக்க பாதுகாப்பு பிரிவுகளுடன் RMP முறையை கொண்டுவருவதை குறித்து யோசிக்க வேண்டும் .
8) NEET மட்டும் போதாது .மருத்துவ கல்லூரியில் break முறை ,(அதாவது ஒரு தாளில் தோல்வியடைந்தாலும் அடுத்த வருடத்திற்கு செல்ல முடியாது ), இளங்கலை மருத்துவ கல்வி முடித்தவுடனே மருத்துவராக தொழில் செய்வதற்கு தகுதி தேர்வு மற்றும் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பதிவு உரிமம் புதுப்பித்தலுக்கான தேர்வு ஆகியவற்றையும் கொண்டு வர வேண்டும்.
9) ஆரிய சதி ,பார்ப்பனர் சதி ,காவி சதி என்றெல்லாம் கூறி கோஷம் இடுவதின் மூலம் நீங்கள் உங்களையே ஏமாற்றி கொள்கிறீர்கள் .சில வருடங்களுக்கு முன் அரசு தரப்பில் இளங்கலை  பொறியியல் கல்வியில் சேருவதற்கான குறைந்த பக்ஷ +2 மதிப்பெண்ணை 35 % என்று மாற்ற முயற்சி செய்தார்கள் .அதற்கு எதிராக ஒரு வழக்கு நடந்தாதாக நினைவு .உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் மாணவர் நன்மைக்காக தான் இந்த முடிவு எடுத்திருப்பதாக கூறினார் .அதற்கு நீதிபதி “மாணவர் நன்மைக்காக என்று தோன்றவில்லை ;ஒருவேளை கல்லூரி உரிமையாளர் நன்மைக்காக இருக்கலாம் ” என்று கூறியதாக செய்தி ஒன்றை வாசித்த நினைவு இருக்கிறது .இன்றும் நடப்பது ஏறத்தாழ அதே விஷயம் தான் .நீட் இல்லாவிட்டால் தடையற்ற வியாபாரம் நடக்கும் .நீட் இருந்தால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறையும் .இது தான் விஷயம் .எடுத்ததிற்கு எல்லாம் இல்லுமினாட்டி சதி முதல் ஆரிய சத்தி வரை அனைத்தயும் கூறும் அறிவு ஜீவிகள் இந்த எளிய உண்மையை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் .அவர்களுக்கு வேறு கட்டாயங்கள் இருக்கலாம் .ஆனால் நாம் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் .
10) “நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்”
என்கிறார் திருவள்ளுவர் .இந்த தொடர் பதிவுகள் அதற்கான முயற்சியே .அடிப்படையில் ஒரு மாநிலத்தின் பள்ளி கல்வி என்பது ஆசிரியர்கள் வசம் உள்ளது .பாட திட்டத்தை தயாரித்தல் ,வகுப்பு எடுத்தல் ,வினாத்தாள்களை தயார் செய்தல் ,விடைத்தாள்களை மதிப்பிடுதல் அனைத்தும் அவர்கள் வசம் உள்ளது .அவர்களது தரம் என்பது மிக முக்கியமான ஓன்று .ஆனால் TET தகுதித்தேர்வுகளை கண்டு மிரளும் ஆசிரியர்களால் NEET தேர்வை எதிர்கொள்ளும் மனநிலை கொண்ட மாணவர்களை வளர்த்தெடுக்க முடியுமா ? எனவே அங்கும் சில சீரமைப்பு வேலைகளை செய்ய வேண்டும் .தகுதி தேர்வு மற்றும் கற்பித்தல் உரிமம் புதுப்பித்தல் தேர்வு ஆகியவற்றை பள்ளி ஆசிரியர்களுக்கு கொண்டுவர வேண்டும்.அவர்களை வேறு பணியில் ஈடுபடுத்த கூடாது .ரோடு இருக்கிறதோ இல்லையோ அரசு பள்ளியும் நூலகமும் நன்றாக இருக்க வேண்டும் .சரி ,தரமான பள்ளி ஆசிரியர்கள் உருவாக வேண்டும் எனில் எது இன்றியமையாதது ?தரமான கல்லூரி ஆசிரியர்கள் தான் .கல்லூரி ஆசிரியர் பணி இடங்கள் முழுவதும் திறமை அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும் .அங்கும் கற்பித்தல் உரிமம் முறையை கொண்டு வர வேண்டும் .தேசிய தகுதி தேர்வுகளை அடிப்படையாக கொண்டு நியமனம் நடக்க வேண்டும் .இப்போது இருக்கும் vicious circle of incompetence உடைக்கப்பட வேண்டும் .சுருக்கமாக கூற வேண்டும் எனில் நீட் தேர்வு தொடர்பாக தமிழகம் இன்று எதிர் கொள்ளும் பிரச்சனைகள் ஒரு நீண்ட கால கொடு நோயின் இறுதி குறி (terminal symptom ).இப்போதாவது நாம் தக்க நடவடிக்கை எடுத்து நமது கல்வி அமைப்பை காப்பாற்ற முயல வேண்டும் .

 

நீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 2

நான் பல கல்வி நிறுவனங்களின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் பார்த்துள்ளேன். ஒரு தனியார் கல்வி நிறுவனம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு 14 வருடங்களுக்கு முன் நடந்த இந்த நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

காற்றாலை முதலாளி ஒருவருக்கு பொறியியல் கல்லூரி ஒன்றை தொடங்க வேண்டும் என்ற ஆசை வந்தது. இடம் வாங்கி கல்லூரியை கட்டி விட்டார். அனைத்து அனுமதிகளையும் பெற்றுவிட்டார். கல்லூரிக்கு நிரந்தர முதல்வர் ஒருவரை நியமிக்க முடிவு செய்தார். தனது ஜாதியை சேர்ந்த ஒரு பேராசிரியர் அரசு பொறியியல் கல்லூரியில் இருந்து ஓய்வு பெறுவதை அறிந்து படை பரிவாரத்துடன் அவர் வீட்டிற்கு சென்றார். 58 வயதில் அரசு பணிக்கு தான் ஓய்வு. 65 வயது வரை தனியார் கல்லூரி முதல்வராக பணியாற்றலாம். பேச்சு வார்த்தை நடந்தது. பேராசிரியர் ஒரே ஒரு condition இருப்பதாக கூறினார். அனைவரும் சம்பளம் தொடர்பானதாக இருக்கும் என்று எண்ணினர். ஆனால் பேராசிரியர் சொன்னது இது தான் – “ஒவ்வொரு வருடமும் அட்மிஷன் முடிந்த பிறகு நிர்வாகிகள் கல்லூரிக்கு உள்ளேயே வரக்கூடாது. கல்லூரி உரிமையாளர் / தலைவர் எக்காரணம் கொண்டும் கல்லூரியின் academic நிர்வாகத்தில் தலையிடக்கூடாது” என்று அழுத்தம் திருத்தமாக கூறினார். வேறு வழி இல்லாமல் தொழிலதிபரும் ஒத்து கொண்டார்.

அடுத்த ஏழு வருடங்களில் அக்கல்லூரி மிகவும் லாபகரமாகவும், சிறப்பாகவும் கொடிகட்டி பறந்தது. தரத்தில் பேராசிரியர் எந்த சமரசமும் செய்யவில்லை. எத்தனை பணம் கொடுத்து வந்த மாணவன் ஆனாலும் பொறியியல் aptitude இல்லை என்றால் கழற்றி விடப்பட்டான். பெற்றோர்களும் அதனை ஒருவாறாக ஏற்றுக்கொண்டனர். பணியாளர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்பட்டது. ஒழுங்காக பாடம் எடுக்காத ஆசிரியர்கள் உடனடியாக வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். ஒரு கணித விரிவுரையாளர், உரிமையாளரின் உறவினர் உள்ளே நுழைந்து விட்டார். சரியாக பாடம் நடத்தவில்லை. வெளியே அனுப்ப உரிமையாளர் விரும்பவில்லை. நமது பேராசிரியர் ஒரு வருட காலம் அந்த விரிவுரையாளரை வகுப்பிற்கு செல்ல விடவில்லை. உரிமையாளரிடம், “உங்கள் உறவினருக்கு பணம் (சம்பளம்) கொடுப்பது உங்கள் விருப்பம். ஆனால் அவரை வகுப்பெடுக்க விட்டு மாணவர்களின் வாழ்க்கையை கெடுக்க உங்களுக்கு உரிமையில்லை என்று ஸ்பஷ்டமாக கூறினார். (அவர் 65 வயதாகி அக்கல்லூரியை விட்டு சென்ற பிறகு கூழை கும்பிடு இடும் மற்றொரு முதல்வர் வந்து கல்லூரியே சீரழிந்து போனது மீதி கதை).

நான் இந்த சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான காரணம், ஒரு கல்லூரியில் நிர்வாகிகளின் தலையீடு மிகவும் குறைவாக இருக்க வேண்டும் என்பதை சுட்டி காட்டத்தான். மேல கண்டது போன்ற பேராசிரியர்களை தேடி கண்டுபிடித்து தலைமை பொறுப்பில் இருந்த வேண்டும். எனில் உங்கள் கல்லூரி மாணவர்கள் (அங்கு படிக்கும் உங்கள் சமுதாய மாணவர்களையும் சேர்த்து தான்) தம் துறை வல்லுனர்களாகவும், தலை சிறந்த இந்தியக் குடிமகன்களாகவும் வெளியே வருவார்கள். இல்லா விட்டால் உங்கள் கல்லூரியில் பெறும் பட்டம் திருமண அழைப்பிதழில் அச்சிடவும் வரதட்சணை பேரத்திற்கும் மட்டுமே பயன்படும். சமுதாயம் உருப்படாது.

நுழைவுத் தேர்வுகள்

நண்பர் போகன் சங்கர் ஒரு விஷயத்தை சுட்டி காட்டினார். நுழைவு தேர்வுகள் நகரத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு சாதகமாக இருப்பதாகவும், கிராமத்தில் படிக்கும் மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருப்பதாகவும் கூறினார். இது தமிழக அரசின் வாதமும் கூட. இதனை கூறித்தான் நுழைவு தேர்வுகளை பலரும் எதிர்க்கிறார்கள். கிராமபுற மாணவர்களுக்கு ஒதுக்கீடு கொண்டுவரும் விஷயம் எல்லாம் கூட 1997ல் நடந்தது. முதலில் 15 %. பிறகு 25 %. இந்த ஒதுக்கீடு உயர்நீதிமன்ற தீர்ப்பு காரணமாக முடிவிற்கு வந்தது. பல வழக்குதாரர்கள் இருந்தபோதிலும் குமரி மாவட்டத்தை சார்ந்த ஒரு மாணவியின் வாதம் மிகவும் பலமாக இருந்தது தெரிகிறது. மனுதாரரான இந்த மாணவி வசிக்கும் கிராமத்தில் அரசு பள்ளி இல்லை. எனவே அருகில் இருக்கும் நகர பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு சென்று +2 முடித்துள்ளார். ஆனால் நகர பகுதியில் நிரந்தரமாக வசிக்கும் எதிர் மனுதாரர் தனது வீட்டிற்கு அருகே உள்ள அரசு பள்ளிக்கு செல்லாமல், கிராமபுற அரசு பள்ளிக்கு சென்றுள்ளார். அதனை பயன் படுத்தி ஒதுக்கீட்டையும் பெறுகிறார். எதிர் மனுதாரரை விட அதிக தகுதி மதிப்பெண்களை பெற்ற மனுதாரர் கிராம புறத்தில் படித்த மாணவர்களுக்கு கிடைக்கும் ஒதுக்கீட்டினால் பாதிக்க பட்டு மருத்துவ கல்வி இடத்தை இழக்கிறார். ”பின்தங்கியவர்கள் நகரத்திலும் உண்டு, கிராமத்திலும் உண்டு. எனவே நகரம் கிராமம் என்று பிரித்து கிராமத்தவருக்கு தனி ஒதுக்கீடு கொடுப்பது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது” என்று கூறி தீர்ப்பளித்துள்ளனர் நீதி அரசர்கள். இந்த தீர்ப்பை தொடர்ந்து தான் தமிழக அரசு ஒரே அடியாக நுழைவு தேர்வை ரத்து செய்யும் வரலாற்று முடிவை !?எடுக்கிறது. அதன் விளைவைத்தான் இன்று கண்டுகொண்டு இருக்கிறோம்.

இந்த தீர்ப்பின் வாயிலாக வேறு ஒரு சுவையான தகவலும் கிடைக்கிறது. ஒரு காலத்தில், அதாவது அறுபதுகளில், தமிழகத்தில் மருத்துவ கல்வி இடங்களில் மாவட்ட வாரியான ஒதுக்கீடு இருந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் 8 மருத்துவ கல்லூரிகளே இருந்தன. ஒவ்வொரு மருத்துவக்கல்லூரிக்கும் கீழே சில மாவட்டங்கள் இருந்தன. அந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அந்த அந்த மாவட்ட வரம்பிற்குள் வரும் மருத்துவ கல்லூரியில் தான் விண்ணப்பிக்க முடியும்; படிக்க முடியும். ஒதுக்கீடு விஷயத்தில் நம்மை மிஞ்ச யார் உண்டு 🙂 ? இம்முறையில் பல பிரச்சனைகள், மோசடிகள் இருந்திருக்கும் போல. நீதிமன்றம் தலை இட்டு இம்முறையை நிறுத்தி உள்ளது.

நீதிமன்றம் தெளிவாக கிராமப்புற பள்ளி மாணாக்கருக்கான ஒதுக்கீடு அரசியல் சட்டப்படி செல்லாது என்று கூறுகிறது. அனைத்து வகையான ஒதுக்கீடுகளும் தவறு என்ற திட நம்பிக்கை கொண்டவன் நான். ஒதுக்கீடு தவறுதான். ஆனால் கிராமப்புற மாணாக்கருக்கு நகர்ப்புற மாணவர்கள் அளவு கல்வி வசதிகள் கிடைப்பதில்லை என்பது உண்மை. இணையம் ஓரளவிற்கு நகர கிராம வேறுபாடுகளை சமன் செய்திருக்கிறது. இருப்பினும் மிகப்பெரிய இடைவெளி இருக்கத்தான் செய்கிறது. கிராமங்களை பற்றி பத்தி பத்தியாக எழுதித்தள்ளும் இலக்கியவாதிகளின் ஒரு சிலரை தவிர ஏனையோர் நகரத்தை நோக்கித்தான் ஓடுகிறார்கள். இந்த பிரச்சனையை சரி செய்வது எப்படி?

மாணவர் விடுதிகள்

நீங்கள் பெங்களூர் மாநகரின் சாலைகளை நிதானமாக சுற்றி வந்தீர்கள் எனில் ஒரு விஷயத்தை கவனிக்கலாம். விதிவிதமான ஜாதிகளின், ஜாதி சங்கங்களின் பெயர்கள் கொண்ட கட்டிடங்கள் இருக்கும். இதில் என்ன புதுமை? ஜாதி சங்கம் இருப்பது என்ன பிரமாதம் என்று உங்களுக்கு தோன்றும். சற்று பொறுமையாக வாசித்தால் உங்களுக்கு புரியும். மேற்படி கட்டிடங்கள் ஜாதி சங்க அலுவலகம் (மட்டும்) அல்ல. பெரும்பான்மையானவை மாணவர் விடுதியும் கூட. பெங்களூரில் கர்நாடாகாவின் பல்வேறு ஜாதிகளுக்கு சொந்தமான மாணவர் /மாணவியர் விடுதி உள்ளது. மாண்டியாவில் இருந்து அல்லது கூர்கில் இருந்து வரும் ஒரு மாணவன் பெங்களூரில் உள்ள pre-university பள்ளியில் அல்லது கல்லூரியில் படிக்க விரும்புகிறான் என்றால் அவனது முதல் சவால் / தேவை என்னவாக இருக்கும்? தங்குவதற்கு ஒரு இடம். ஒரு வருடம் செலவழித்து நுழைவு தேர்வு எழுதுவதற்காக பயிற்சி பெற விரும்பும் மாணவனுக்கும் இதே தேவை தான் இருக்கும். தனது ஜாதி அமைப்பிற்கென ஒரு விடுதி இருந்து அங்கு இலவசமாகவோ குறைந்த செலவிலோ தங்கலாம் என்றாலே பாதி பிரச்சனை தீர்ந்து விடும். கிராமத்தில் இருக்கும் நன்றாக படிக்கும் மாணவ மாணவியரை நகரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு அனுப்ப பெற்றோர்களும் யோசிக்க மாட்டார்கள். மூவேந்தர்களும் தங்கள் ஜாதி என்று நிரூபிக்க கம்பு சுற்றும் நண்பர்களிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன்.உங்கள் ஜாதியை சேர்ந்த மாணவி ஒருவர் கலந்தாய்விற்காகவோ, எதாவது ஆய்வரங்கில் கலந்து கொள்ளவோ சென்னைக்கு வந்தால், அவர் தங்குவதற்கு, சரி விடுங்கள், ஓய்வெடுப்பதற்கு 100 சதுரஅடி இடத்தையாவது தயார் செய்து வைத்திருக்கிறீர்களா?

நமக்கு இன்று முதல் தேவை அது தான். அதனை நிறைவேற்றிய பிறகு 100 சிலைகளை வைத்து மகிழலாம். எனக்கு தெரிந்து நாடார் உறவின் முறை இந்த பாணியை தங்கள் சமுதாய வணிகர்களுக்காக கையாளுகிறார்கள். அதன் பலனாக இன்று அவர்கள் வணிகத்தில் மிக சிறப்பாக இருப்பதை காணலாம். நமது தொன்மையான பண்பாட்டின் ஒரு பகுதி தான் இது. புதிய விஷயம் ஒன்றும் இல்லை. கொஞ்சம் யோசித்து பாருங்கள். தமிழகத்தின் தொன்மையான கோவில் நகரங்களிலும் ஏன் காசியிலும் கூட ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் சொந்தமான சத்திரங்கள் இருந்தன. இன்னும் இருக்கின்றன. திராவிட சித்தாந்தத்தின் போலி ஜாதி அழிப்பு அலையில் சிக்கி கொள்ளாவிட்டால் இதே பாணியில் மாணவ மாணவியர் விடுதிகளை மாநகரங்களில் அமைத்திருப்போம். இன்னும் ஒன்றும் கெட்டு போகவில்லை. என்னை கேட்டால் நமது மாநிலத்தில் உள்ள மாநகரங்களில் மட்டும் அல்ல புது தில்லியில் கூட இத்தகைய மாணாக்கர் விடுதிகளை தொடங்கி நடத்த வேண்டும். 50% இடத்தை அவரவர் சமூகத்தில் உள்ள வசதி அற்ற கிராமப்புற மாணவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.மீதி 50% இடத்தை ஜாதி வித்தியாசம் இல்லாமல் நல்ல வாடகைக்கு வேறு மாணவர்களுக்கு வழங்க வேண்டும். அந்த வாடகை இதர செலவுகளை ஈடு கட்டி விடும். கன்னட எழுத்தாளர் பைரப்பாவின் சுயசரிதையை வாசித்த போது தான் இத்தகைய மாணாக்கர் விடுதியின் முக்கியத்துவம் புரிந்தது. இடம் வாங்கி, கட்டிடம் கட்டி. …..எங்கள் சமூக /ஜாதி சங்கம் அதனை வலுவானது இல்லை என்கிறீர்களா? அதற்கும் வழி உண்டு.

மாணவர் / மாணவியர் விடுதிகளை நிறுவுவது பொருட்செலவு மிகுந்த விஷயம் தான். கால அவகாசமும் தேவைப்படும். ஆனால் மாநாட்டு பந்தலுக்கே ஒரு கோடி ரூபாய் செலவழிக்கும் அமைப்புகள் இந்த தேவைக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். பலமான, வசதியான ஜாதி / சமூக சங்கங்கள் இல்லாதவர்கள் என்ன செய்வது? நல்லபடியாக ஒன்றை அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு அமைக்க முடியுமா என்று பாருங்கள். அது நீண்ட நாள் திட்டம். குறுகிய கால திட்டம் ஒன்றை சொல்கிறேன். உங்கள் சமூகம் அரசின் இடஒதுக்கீடு கொள்கையை பயன்படுத்தும் சமூகம் என்னும் பட்சத்தில் மாநகரங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் உங்கள் சமூகத்தை சார்ந்தவர்கள் வேலை பார்ப்பார்கள். கடைநிலை ஊழியர் தொடங்கி உயர் அதிகாரி வரை பலரும் இருக்க வாய்ப்புண்டு. இவர்களில் ஜாதி அபிமானம் உள்ளவர்களிடம் சென்று அவர்கள் வீட்டில் உங்கள் சமூகத்தை சார்ந்த கிராமத்தில் இருந்து நகருக்கு படிக்க வந்த ஒரு மாணவன் அல்லது மாணவியை தங்க வைக்க சொல்லுங்கள். பெருநகர வாழ்வு நெருக்கடி மிகுந்தது தான். ஆனாலும் ஒரு நபரை கூட சேர்த்துக்கொள்ளலாம். ஒடுங்கி இருந்து படிக்க ஓரிடம். படுக்க ஆறடி. அவ்வளவு தானே தேவை. குளியலறை இணைந்த குளிர் வசதி உள்ள அறைகளை நீங்கள் கேட்க போவதில்லையே. அவர்கள் நினைத்தால் இதனை செய்யலாம். கடை நிலை ஊழியர்கள் எனில் paying guest முறை தான் நியாயம். அதிகாரிகளை பொறுத்த வரையில் இலவசமாகவே செய்யலாம். எந்த ஜாதியின் பெயரை சொல்லி கல்வியில் ஒதுக்கீடு வாங்கினோமோ, வேலை வாய்ப்பை பெற்றோமோ, பணி உயர்வில் முன்னுரிமை கேட்டோமோ அந்த ஜாதியின் முன்னேற்றத்திற்கு உதவ இதை விட சிறந்த வழி ஒருவருக்கு இருக்கிறதா? இந்த வழிமுறை உடனடி பலனை தர வல்லது. வீட்டில் தங்க இடம் எல்லாம் தர முடியாது. ஆரியர் ஒழிக என்று முகநூலில் 100 தடவை எழுதி தான் என் ஜாதியை வளர்ப்பேன் என்று யாரவது சொன்னார்கள் எனில் அவர்களை பெருச்சாளி என, கட்டு சோற்றில் பெருச்சாளி என அறிந்து கொள்ளுங்கள்.

Thank to the Editorial Board of http://www.tamilhindu.com for editing.

நீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 1

நீட் தொடர்பாக,  நீட் எதிர்ப்பு அலைகள் தொடர்பாக நான் அறிந்த சில விஷயங்களை எழுத உத்தேசம்.

இரண்டு தேசிய அளவிலான தேர்வுகளில் கட் ஆ ஃப் உடன் தேர்ச்சி அடைந்திருக்கிறேன். சில மருத்துவம் சார்ந்த நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருப்பதின் பகுதியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர் முதல் உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு பிரிவுகளில் பணிபுரியும் மருத்துவர் வரை பலருடன் தொடர்ந்து உரையாடி வருகிறேன். மேலும் ஜீவனோபாயத்தின் பகுதியாக அடிக்கடி Lancet ஐ புரட்டுகிறேன், PubMed ஐ துழாவுகிறேன் ( இதே காரியத்தை செய்யும் நவீன தமிழ் எழுத்தாளர் ஒருவரும் உண்டு. அவர் எதற்கு இதனை செய்கிறார் என்று எனக்கு மட்டுமல்ல அவருக்கும் தெரியாது 🙂 . உளவியல் கற்ற காலத்தில் நேர்மையான மருத்துவர்கள் கந்து வட்டி கொள்ளையர்கள் உட்பட பலராலும் துன்புறுத்தப்படுவதை நேரடியாக அறிந்துள்ளேன். தனியார் மருத்துவ கல்லூரி சேர்க்கை சம்பிரதாயங்கள் குறித்தும் நேரடி அனுபவம் உண்டு. இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்புகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். வருடம் தோறும் நமது மாணவர்களின் தரம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் இடத்திலும் இருக்கிறேன். சுமார் பத்து வருடங்களாக மென் திறன் பயிற்சி, குடிமை தேர்வு பயிற்சி ஆகியவற்றை கொடுப்பதால் உள்ள அனுபவம் தனி. இது தவிர மனித வள ஆலோசகராக இருந்ததால் நிறுவனங்கள் நமது மாணவர்களை எப்படி பார்க்கின்றன என்பதும் ஓரளவிற்கு தெரியும். இது அத்தனையையும் தாண்டி சமீபத்தில் வந்த அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க இயலாத நோய் தந்த மருத்துவ அனுபவம் தனி. ஏறத்தாழ இரண்டு தசாப்த்தங்களுக்கு முன், head on collusion caseற்கு internal hemorrhage இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் என்ற அடிப்படை கூட தெரியாத “விபத்து ” specialist மருத்துவரால் ஏற்பட்ட இழப்பும் உள்ளது.

ஏன் இந்த சுய புராணம் ?

இப்போது நீட் தொடர்பாக கருத்துக் கணைகளை வீசும் பலருக்கு இலவச இணைய இணைப்பு இருக்கிறது என்பதை தவிர எந்த தகுதியோ, locus standi யோ இல்லை மேற்கண்டவை எனது தகுதிகள் /தகுதியின்மைகள்.

ஜாதி சங்கங்களும் கல்வி நிறுவனங்களும்

ஐம்பது அறுபது வருடங்ககுக்கு முன்னர் கூட ஜாதி சங்கங்கள் ஆக்க பூர்வமான வேலைகள் பலவற்றை செய்தன. திராவிட சித்தாந்தம் வந்து ஜாதியை ஒழிப்போம் என்று கூற தொடங்கிய பிறகு தான் ஜாதி சங்கங்கள் சீரழிந்து ஓட்டு பிச்சைக்காரர்களின் கூடாரமாகவும், கட்ட பஞ்சாயத்து மையங்களாகவும் மாறின. பல அமைப்புகள் தரகு வேலை செய்ய தொடங்கின. ஜாதி அபிமானம் என்பது வேறு ஜாதி வெறி என்பது வேறு. நமது போராளிகளுக்கு இது புரியவே புரியாது. ஜாதியை கெட்ட வார்த்தையாக மாற்றிய திராவிட அமைப்புகள் ஜாதி பார்க்காமல் வேட்பாளர்களை நிறுத்திய சரித்திரமே கிடையாது.

தங்கள் சமூகத்தில் நவீன கல்வி கல்வி பெற்றவர்களது எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று எண்ணும் அனைவரும் தமது ஜாதி அமைப்புகள் வாயிலாக கல்வி நிறுவனங்கள் தொடங்குவதை குறித்து யோசிக்க வேண்டும். மாநாடு, ஆயிரம் வாகன பேரணி, கலர் கயிறுகள், பன்ச் டயலாக் டீ ஷர்டுகள் ஆகியவை தராத பயனை கல்வி கூடங்கள் தரும். சொல்லப்போனால் இன்றய சூழ்நிலை லாப நோக்கமற்ற கல்வி நிறுவனங்களை தொடங்குவதற்கான சரியான சூழ்நிலை. கல்வி கொள்ளையர்கள் நடுவில் ஒரு நல்ல நிறுவனமானது இருக்காதா என்று நம்மவர்கள் தேடி கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் “தங்க முட்டை இடும் வாத்தை அறுத்த” மூட கொள்ளையர்கள் வரும் விலைக்கு தங்கள் நிறுவனங்களை விற்க தயாராக இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டால் அடுத்த 10/15 வருடங்களுக்குள் ஏற்படும் மாற்றம் வியக்கத்தக்கதாக இருக்கும்.

இந்த முயற்சியில் நீங்கள் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு கல்வி நிறுவனத்தின் சிறப்பு அதன் கட்டிடங்களிலோ, பேருந்துகளிலோ இல்லை. அந்நிறுவனத்தின் மனிதவளத்தில் தான் உள்ளது. வாயிற்காப்பாளர் தொடங்கி கல்வி நிலைய தலைவர் வரை அனைவரையும் திறமை அடிப்படையில் மட்டுமே நியமிக்க வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் சிறு நகரங்களில் பெரிய அளவு சிரமம் இல்லாமல் பள்ளிகள், கலை அறிவியல் கல்லூரிகள், சட்டக்கல்லூரிகள் ( நன்றி பா ம க ), பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றை உருவாக்கி விடலாம். நிர்வாக இடத்தில் 50% அந்தந்த சமூகத்தை சார்ந்த ஏழை மாணவ மாணவியருக்கு இலவசமாக வழங்க வேண்டும். ஏழைகள் என்றால் உண்மையான ஏழைகள். சான்றிதழில் மட்டும் ஏழையாக இருப்பவர்கள் அல்ல. மீதம் 50% இடத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். இதற்காக சட்டப்படி நன்கொடை வாங்குவதில் தவறில்லை. தரமான கல்வியும், ஒரிஜினல் ஒரு முக ருத்ராட்சம் போல அரிதான பொருள் தான். தரம் இருந்தால் கொட்டி தருவார்கள். ஆனால் தரத்தை எது நிர்ணயம் செய்கிறது?

கல்லூரி /பள்ளி தொடங்கியதும் தான் எட்டு திக்கில் இருந்தும் சூனியம் பறந்து வரும். எத்தனையோ நல்ல கல்வி நிறுவனங்கள் அழிந்தது இத்தகைய செய் வினைகளால் தான். வேறு ஒன்றும் இல்லை. எத்தகைய தகுதியும் இல்லாத தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டினாலும் பாடம் ஒழுங்காக எடுக்க தெரியாத கழிசடைகள் ஒவ்வொன்றாக நானும் உங்கள் ஜாதி தான் என்று கிளம்பி வரும். அவர்களுக்கு பலமான சிபாரிசும் வரும். நான் எனது ஜாதி அமைப்பின் கல்வி நிறுவனங்களில் தேர்வு குழுவில் இருந்தாலும் சரிதான், ஏனைய புது கல்வி நிறுவனங்களின் ஆசிரிய தேர்வு குழுவில் இருந்தாலும் சரிதான், ஒரு விஷயத்தை அழுத்தம் திருத்தமாக கூறுவேன். கல்வி நிறுவனங்களை நாம் நடத்துவது நமது சமுதாய மாணவர்களின் நன்மைக்காக தானே தவிர வேலை செய்யாத புறம்போக்குகளின் நன்மைக்காக அல்ல.

உங்கள் ஜாதியை சேர்ந்த ஒருவனுக்கு வேலை கொடுத்தால் ஒரு குடும்பம் நன்றாக இருக்கும். அவ்வளவு தான். ஆனால் திறமையான ஆசிரியர் ஒருவருக்கு வேலை கொடுத்தால் ஒரு தலைமுறை மாணவர்கள் நல்வாழ்வு பெறுவார்கள். பணத்திற்க்கோ, ஜாதி அபிமானத்திற்கோ பலியாகி மோசமான ஆசிரியர் ஒருவருக்கு வேலை கொடுத்தால் அவர் ஒரு சில தலைமுறை மாணவர்களின் அறிவு கண்களை குருடாகிவிடுவார். உங்கள் நிறுவனத்தையும் நாசம் செய்து விடுவார். இதனை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். சென்ற தலைமுறையில் இந்த விஷயத்தில் மிக தெளிவாகி இருந்தார்கள். பல கிறிஸ்தவ நிறுவனங்கள் குடுமி வைத்த அந்தணர்களை வேலைக்கு வைப்பதில் எந்த தயக்கமும் கொள்ளவில்லை. திறமை இருந்தால் போதும். அதே போல வைதீக அந்தணர்கள் ஆங்கிலேயரிடம் சென்று ஆங்கிலம் கற்கவும் தயங்கவில்லை. இதனை புரிந்து கொண்டு சர்தார்ஜி ஆனாலும் பார்சியானாலும் திறமை உள்ளவர்களுக்கு வேலை கொடுங்கள். இனி சொந்த ஜாதியில் உள்ள நபர்கள் அதிகம் ஒரு கல்வி நிறுவனத்தில் இருக்க கூடாது என்பதற்கு மனித வள நிர்வாக ரீதியாகவும் ஒரு காரணம் உண்டு. வேற்று ஜாதியையோ /மதத்தையையோ சார்ந்த நபர்கள் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் வெளியே தள்ளி விடலாம். ஆனால் மாமனையும் மச்சானையும் உள்ளே வைத்தால் இது நடக்குமா ? வேற்றாள்கள் வேலைகிடைத்ததே புண்ணியம் என்று ஒழுங்காக வேலை செய்வார்கள்.

உயர்கல்வி நிலையங்களில் பாலியல் கொடுமைகள்-1

HM_Caricature_Poster_3_Englishராயா சர்க்கார் ,ஐக்கிய அமெரிக்காவில் தொடங்கப்பட்ட hall of shame ஐ முன்மாதிரியாக கொண்டு இந்திய கல்வி உயர் நிறுவனங்களில் ஆசிரிய பணியில் இருந்து கொண்டு மாணவியருக்கும் ,சக பணியாளர்களுக்கும் பாலியில் தொல்லை கொடுத்த பேராசிரியர்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளார் .இது சட்டப்படி சரியல்ல .ஆனால் சர்க்கார் போன்ற முற்போக்கு அந்தண எதிர்ப்பாளர்கள் செய்யும் எந்த விஷயம் தான் சட்டப்படி சரியாக இருந்தது .பாதிக்கப்பட்டவர் என்று கூறிக்கொள்ளும் யார் வேண்டுமானாலும் ஒரு பேராசிரியரின் பெயரை சர்க்காருக்கு அனுப்பலாம் .அந்த பெயர் பட்டியலில் சேர்க்கப்படும் .நமது இடது சாரிகளும் ,பெண்ணிய பேரொளிகளும் இதற்கு வழமை போல ஆதரவு தந்திருப்பார்கள் என்று தானே எண்ணுகிறீர்கள் ?அது தான் இல்லை .அவர்கள் due process என்பதை குறித்து பதற்றத்தோடு பேச தொடங்கினர் .அதாவது சட்டப்படி நிரூபிக்க படாத விஷயத்தை பொதுவில் கூறக்கூடாது என்றனர் .சர்க்கார், தாம் “மோடியின் அட்டூழியங்கள்” பற்றி எழுதிய போது அல்லது இனி எழுதும்போதும் பெண்ணிய தரப்பு இதே காருணியத்தை காட்டுமா ?என்று கேட்டார். எதிர்ப்பாளர்களிடம் பதில் இல்லை. .பெண்ணிய பெருந்தலைகள் ஏன் இந்த வெளிப்படுத்துதல்களுக்கு எதிராக உள்ளனர் ? பட்டியலில் உள்ள பலரும் அவர்கள் கொண்டாடும் முற்போக்கு அறிவு ஜீவி ஆண்கள் .இந்த விவகாரத்தால் இடதுசாரி அறிவு ஜீவி உலகம் கலங்கி கிடக்கிறது .சர்க்கார் இப்படி ஒரு விஷயத்தை தொடங்கிய செய்தி கேட்டதுமே நண்பர்களிடம் கூறினேன் .இடதுசாரி அறிவுஜீவிகளின் நிம்மதி பறிபோக போகிறது என .ஜோதிட திறமை இல்லை .அனைத்து இடது சாரிகளும் மோசமானவர்கள் என்ற முன்முடிவும் இல்லை .எளிதான பொதுஅறிவு தான் .பெரும்பாலான உயர்கல்வி நிறுவனங்களில் தோட்டக்காரன் கூட இடது சாரி அறிவு ஜீவியாகத்தான் இருப்பான் .பிறகு பேராசிரியர்களை குறித்து கேட்கவா வேண்டும் ? அங்கே கல்லெறி நடந்தால் வேறு யாருக்கு அடிபடும்:).Karl Marx, Jean Paul Sartre,Simone de Beauvoir போன்றவர்களின் வாழ்க்கை சித்திரங்களை வாசித்தவர்களுக்கு இந்த விவகாரங்கள் எந்த அதிர்ச்சியையும் தரா .ஏனையவர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை தரலாம் .நமது உயர்கல்வி நிலையங்களில் ஏற்பட்டுள்ள சீரழிவுகளை பார்ப்பதற்கு முன்பு உங்களுடன் ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.சுமார் பத்து வருடங்களுக்கு முன் நடந்தது .ஒரு நல்ல சிறுகதையின் முடிச்சை தன்னுள் கொண்டது …….தொடரும்

ஹிந்து மதம்,அந்தணர்கள் :ஒரு உரையாடல்

முகநூலில் நண்பர் விஜயராகவனின் சுவரில் நடந்த விவாதம் .முழு பதிவை இங்கே காணலாம் :https://www.facebook.com/vijayaraghavan.krishnan/posts/10214222634977232.இந்த விவாதத்தில் எனக்கும் ஜடாயுவிற்கும் இடையில் நடந்த உரையாடலை மட்டும் தனியாக எடுத்து இங்கு பதிவு செய்துள்ளேன் .

Jataayu B’luru // கலப்பு மணம் புரிந்து ஒரே அமைப்பாக மாற வேண்டும் // என்று அந்தப் பதிவு கூறவில்லை. கலப்புத் திருமணத்திற்கு ஆதரவாக ராஜாஜி, வீர சாவர்க்கர், காந்தி போன்ற மகத்தான மனிதர்களின் மேற்கோள்கள் அடங்கிய தொகுப்பு தான் அந்தப் பதிவு. கலப்பு திருமணம் என்றாலே கத்தியைத் தூக்க வேண்டும் என்ற மனநிலையை விடுத்து. ஒரு சமூகத்தின் வரலாற்றில் இயல்பாக நடக்கும் விஷயம் தான் என்பதைத் தான் அந்த மேற்கோள்கள் வலியுறுத்தின. Anyway, உங்களது இந்தக் கட்டுப்பெட்டி வாதங்கள் கடும் அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இப்போது நாம் நவீன ஜனநாயகத்தில் வாழ்கிறோம். மன்னராட்சி காலத்திலோ ஜமீந்தார்களின் ஆளுகையிலோ அல்ல. எனவே வர்லாற்று ரீதியாக “பிராமணர்கள்” என்ற சமூகக் குழு ஆற்றிவந்த இணைப்புப் பணி அப்படியே அதே பாணியில் இப்போதும் தொடர்வதற்கான தேவை இல்லை. இப்போது இந்து சமூகத்தை ஆன்மீக, பண்பாட்டு ரீதியாக இணைப்பவை இந்திய தேசியமும், இந்துமதத்தின் தத்துவங்களும், வழிபாட்டு முறைகளும் கலாசார செயல்பாடுகளும் தான். எந்த ஒரு குறிப்பிட்ட “சாதியும்” அல்ல. வேதங்களிலும் ஆகமங்களிலும் நமது புனித நூல்களிலும் உள்ள ஞானத்தை அனைத்து இந்துக்களும் கற்கவும் பின்பற்றவும் பிரசாரம் செய்யவும் வேண்டிய காலம் இது. இதை முதலில் புரிந்துகொள்ளுங்க்ள். கலப்பு திருமணம் *தவறல்ல* என்ற கருத்தாக்கம் கூட உங்களைப் போன்றவர்களிடம் ஏற்படுத்தும் பீதியையும் பதட்டத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது

Jataayu B’luru // அந்தணர் அழிந்தால் அத்துடன் ஹிந்து மதமும் அழியும் // என்பது சரிதான். ஆனால், அந்தணர் என்பது பிறப்பு அடிப்படையிலான சாதி அல்ல – இப்போதும் சரி, பழைய காலகட்டத்திலும் சரி. நமது தர்மத்தை இக்கட்டான காலகட்டங்களில் தூக்கி நிறுத்திய நம்மாழ்வார், அப்பர், துகாராம் போன்ற பெரியவர்களும் ஹரிஹரர்-புக்கர், சிவாஜி, குரு கோவிந்த சிங் போன்ற வீரர்களும் “பிராமணர்” என்று அழைக்கப்படாத பல்வேறு குலங்களில் பிறந்தவர்கள் தான். மேலும், ‘அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்’ என்பது குறள். மகாபாரதமும் இதையே கூறுகிறது.

Bcak Nayar  : நான் அந்தணன் என்ற சொ:ல்லிற்கான பொருளை மும்மத ஸ்தாபகர்களுடைய பாஷ்யங்களில் இருந்து நிர்ணயம் செய்கிறேன் .நீங்கள் நவ ஹிந்துத்வ மரபில் இருந்து / அரசியலில் இருந்து நிர்ணயம் செய்கிறீர்கள் . விஷயம் அவ்வளவு தான் . லவலேசமேனும் கடவுள் நம்பிக்கை உடையவர்களால் உங்களது “புரட்சிகரத்தை ” ஏற்க முடியாது .பல்வேறு வர்ணத்தில் பிறந்தவர்கள் சம்ப்ரதாய ப்ரவர்த்தகர்களாக இருந்துள்ளனர் .ஆனால் அவர்கள் யாரும் உங்களை போல சமுதாய கட்டமைப்பை, மதத்தை உடைக்க முயலவில்லை . வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் கையில் சிக்கியவர்களுக்கெல்லாம் பூணூல் போட்டு வேத அத்யாயனம் செய்ய வைத்தாரா ? அப்பர் ஆதி சைவர்களது ஆதிக்கம் ஒழிக என்றாரா ? வீர சிவாஜியின் குரு யார்? அவரது மரபினர் தஞ்சை வந்தபோது யாரை குருவாக அனுப்பி வைத்தார் ? கொஞ்சம் யோசித்தால் விஷயம் புரிந்து விடும் . பெரும் புரட்சியாளராக உங்கள் தரப்பினராலும் திராவிட ,இடது சாரி சிந்தனையாளர்களாலும் கருதப்படும் ராமானுஜர் (என்னை பொறுத்த வரை ராமானுஜர் புரட்சி எதுவும் செய்யவில்லை ; தீக்ஷை இத்யாதிகளில் பாஞ்சராத்ர மரபை , அது அனுமதித்ததை தான் கைக்கொண்டார் .அவர் சம்ப்ரதாய விரோதமாக ஏதும் தொடங்கி வைக்கவில்லை ) அனைவருக்கும் த்வய அஷ்டாக்ஷர மந்திரங்களை உபதேசம் செய்தாரே அன்றி காயத்ரியை செய்ய வில்லை . விடை எளிமையானது .மோக்ஷத்தை யாசிப்பவனுக்கு மந்திர ரத்னங்களான த்வயமும் அஷ்டாக்ஷரமும் போதும் .வைதீக கர்மாக்களை செய்பவர்களுக்கு தான் காயத்ரி தேவை .அது அவர்களது குலதனம் . வர்ண வேறுபாடு என்னும் விஷயத்தில் எங்களுக்கு யாருக்கும் எரிச்சலோ கோபமோ இல்லை .வைதீகர்களுக்கும் , அர்ச்சகர்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை .எந்த நல்ல ஹிந்து விற்கும் இருக்காது .ஒருத்தனுக்கு / ஒருத்திக்கான மதம் சார்ந்ததேவை என்ன ? இஹலோகத்தில் தர்மமாக சுகம் .பரலோகத்தில் மோக்ஷம் .இவற்றில் எது கிடைக்கவும் மாறுவேட போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லாத அரசியல்வாதிகள் தான் “சுய மரியாதை ” என்ற போர்வையில் குட்டையை குழப்புகிறார்கள் . நீங்கள் அதே காரியத்தை சமதர்மம் என்ற போர்வையில் செய்கிறீர்கள் .

Jataayu B’luru // ஆனால் அவர்கள் யாரும் உங்களை போல சமுதாய கட்டமைப்பை, மதத்தை உடைக்க முயலவில்லை // ஆமாமாம், நான் உடைச்சு சமுதாய கட்டமைப்பும் மதமும் உடைந்துவிடும் பாருங்கள் 🙂 நிற்க. 19ம் நூற்றாண்டின் இறுதியில் தயானந்த சரஸ்வதி என்ற பெரியவர் ஆரிய சமாஜம் என்ற மாபெரும் இயக்கத்தை ஆரம்பித்தார். பெண்களுக்கும், அப்போது தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்ட மக்கள் உட்பட அனைவருக்கும் காயத்ரி மந்திரத்தையும் வேத அத்யயனத்தையும் செய்து வைத்தார். அன்னிய மதத்திற்குச் சென்றவர்கள் தாய்மதம் திரும்புவதற்காக சுத்தி என்ற அற்புதமான சடங்கை உருவாக்கினார். அவர் சம்பிர்தாய ப்ரவர்த்தகர் இல்லையா? அல்லது உங்க்ளைப் பொறுத்தவ்ரையில் அது 15ம் நூற்றான்டுடன் நின்றுவிட்டதா? கோடிக்கணக்கான மக்கள் அந்த இயக்கத்தைப் பற்றினர். வட இந்தியா முழுவதும் இந்து தர்மத்தையும் இந்து சமுதாயத்தையும் காப்பதில் பெரும்பங்காற்றுவது ஆரிய சமாஜம். இதெல்லாம் நடந்து 150 ஆண்டுகள் ஆன பிறகு, ஆயிரக்கணக்கான பள்ளிகளில் குழந்தைகள் காலைப் பிரார்த்தனையில் காயத்ரி மந்திரத்தை ஓதிக்கொன்டிருக்கும் போது, நீட்டி முழக்கிக் கொண்டு வந்து குறுகிய நோக்கில் சம்பிரதாயவாதத்தைப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். குலதனம் அது இது என்றெல்லாம் ஞானத்தைப் பொத்தி வைத்த காலம் போய்விட்டது, விழித்துக் கொள்ளுங்கள்

Jataayu B’luru உண்மையில் உங்களது இந்த “விவாதமே” சாதிய மேட்டிமைவாதத்தை மத நடைமுறைகளில் தூக்கிப்பிடிப்பது தான். அதையே வேறுவேறு விதமாக மாற்றிமாற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த வெட்டி விவாதத்தில் ஈடுபட எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. இதற்குப் பதிலாகப் போய் நாலு நல்ல சினிமா பாட்டு கேட்டு அதில் உள்ள ராகங்களைப் பற்றி விவாதிக்கலாம், நான் இப்போது Suresh Venkatadri உடன் உரையாடிக்க்கொண்டிருப்பதைப் போல 🙂

Bcak Nayar தயானந்தரை எல்லாம் நான் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டேன் .அவர் உங்களை போன்ற குழப்பவாதிகளுக்கு முன்னோடி (விளக்கி சொன்னால் வழக்கம் போல நீங்கள் புண் படுவீர்கள் ) .அந்ய மதத்திற்கு சென்றவர்களுக்கு மட்டு மல்ல அந்நிய தேசத்தை சேர்ந்தவர்கள் கூட வைணவராக , சைவராக மாறலாம் .தேடுதல் உள்ளவர்களுக்கு வழி உண்டு ; தயானந்தர் செய்ததெல்லாம் சில்லறை புரட்சி . பயனற்றவை .அனைவருக்கும் எதற்கு வேத அத்யாயனம் செய்து வைத்தார்  ? அவர்களை காட்சி சாலை / பரிசோதனை சாலை விலங்குகள் போல பயன்படுத்தவா ? அவர்களது ஆன்ம விடுதலை தான் லக்ஷ்யம் என்றால் அனுஷ்டிப்பதற்கு எளிதானதும் , சாஸ்த்ர சம்மதமானதுமான சிவ நாமம் / ராம நாம உபதேசம் செய்தால் போதுமே. பள்ளி குழந்தைகளுக்கு வடமொழியிலோ அல்லது அவர் அவர் தம் தாய் மொழியிலோ உள்ள தோத்திர பாடல் போதுமே .காயத்ரி எதற்கு ?

Jataayu B’luru // தயானந்தரை எல்லாம் நான் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டேன் .// அதனால் தான் உலகம் உங்களைப் (போன்றவர்களை) கணக்கில் எடுக்காமல் சென்று கொண்டிருக்கிறது. இந்து சமுதாயத்தின் ஒளிவிளக்காக எழுந்துவந்த மகத்தான தர்ம ஆசாரியர்களில் ஒருவரைப் பற்றிய இத்தகைய திமிர்த்தனமான அகம்பாவம் பிடித்த கண்ணோட்டத்துடன் என்ன எழவுக்கு நான் விவாதிக்க வேண்டும்?

Bcak Nayar ஸ்ரீராமர் குறித்து உங்கள் புரட்சி போராளி தயானந்தரின் கருத்து என்ன .உங்களுக்கு தெரியாமல் இருக்காதே .அதனை அர் எஸ் எஸ் ,பாஜக காரர்களிடமும் சொல்லுங்கள் . அப்படியே அனைவரும் மாட்டிறைச்சி உண்ண வேண்டும் என்ற வீர சவர்க்கரின் கருத்தை பெ.தி.க வுடன் இணைந்து முன்னெடுங்கள் . யாரை ஏமாற்ற முயல்கிறீர்கள் ஜடாயு ? மூட அரசியல் ஹிந்துக்களை யா அல்லது உங்கள் மனசாட்சியை யா ?

Jataayu B’luru லாலா லஜ்பத்ராய், சுவாமி சிரத்தானந்தர், ம.ரா.ஜம்புநாதன் போன்ற மகத்தான தன்னலமற்ற மாணிக்கங்களை உருவாக்கியது ஆரிய சமாஜம். உங்களைப் போன்ற குறுக்கல்வாதிகளைத் தான் இப்போதைய வறட்டு மீள்-சம்பிரதாயவாதம் உருவாக்கிக்கொண்டிருக்கிறது

Bcak Nayar ராமன் க்ருஷ்ணன் எல்லாம் கடவுள் இல்லை என்று சொன்னவர் ஒரு ஆச்சாரியர் ; பசு மாம்சத்தை அனைவரும் தின்ன வேண்டும் என்று கூறியவர் மற்றொரு ஆச்சாரியர் .நல்ல குரு பரம்பரை

Jataayu B’luru சங்கரர் குறித்தும், சிவபெருமானையும் சைவ ஆகமங்களையும் குறித்தும் உங்கள் மாத்வப் பேரொளிகள் எழுதியதை மற்ற அத்வைத, சைவ மரபைச் சேர்ந்த இந்துக்கள் சகித்துக் கொண்டு, அந்த சம்பிரதாயத்தையும் அங்கீகரிக்கிறார்கள் இல்லையா? அதே போல, ஆரிய சமாஜத்தின் புராணமறுப்பு வாதங்களையும் நீங்கள் சகித்துக் கொள்ளுங்களேன். நாங்கள் யாரையும் ஏமாற்ற முயலவில்லை. பன்மைத்தன்மையை மதித்து, அனைவரையும் பொதுவான அம்சங்களை வலியுறுத்தி இணைத்து அரவணைக்க முயல்கிறோம். உங்கள் சிறு சம்பிரதாய வட்டத்திற்கு வெளியே சிந்திக்கத் தெரியாத உங்களைப் போனற குறுக்கல்வாதிகளுக்கு அத்தகைய சிந்தனை, முனைப்பு இல்லாதிருந்தால் கூட பாதகமில்லை. அதை எதிர்ப்பது என்பது மூர்க்கம் மட்டுமே

Bcak Nayar ஏனையவர்களுக்காக . நீங்கள் பத்தாம் வகுப்பு வரலாற்றில் ஆரிய சமாஜ தயானந்தரை குறித்து வாசித்திருப்பீர் .அன்னாரது கருத்து ராமாயணம் புரட்டு கதை என்பது . லண்டனில் வீர சாவர்க்கரை சந்தித்த வவேசு ஐயரை கோ மாம்சம் உண்ணுமாறும் அது அனைவரும் உண்ண தக்கது என்றும் சாவர்க்கர் கூறியுள்ளார் .இதனை குறித்து ஏராளமாக எழுதியும் உள்ளார் .ஆனால் வீரவாஞ்சிநாதன் போன்றவர்கள் கோ ஹிம்ஸை செய்யும் அந்நியர்களுக்கு எதிராக பெரும் போராட் Lங்களை செய்துள்ளனர் .இது தான் மிகப் பெரிய வரலாற்று முரண்

Jataayu B’luru // ராமன் க்ருஷ்ணன் எல்லாம் கடவுள் இல்லை என்று சொன்னவர் ஒரு ஆச்சாரியர் // சைவ ஆசாரியார்கள் எல்லாருமே அப்படித் தான் சொல்கிறார்கள். என்ன, அவர்கள் 13-14ம் நூற்றாண்டிலேயே அதை எழுதிவிட்டார்கள், அவ்வளவு தான். எனவே தயானந்தரை மட்டும் இப்படிக் குற்றம் சாட்டுவது அபத்தம். மட்டுமல்ல, உள்நோக்கம் கொண்ட போலித்தனம்

Bcak Nayar Jataayu முட்டு சந்தில் சிக்கும் போதெல்லாம் செய்யும் வேலை என்னவென்றால் விவாதத்தை அத்வைதம் X த்வைதம் என்று மாற்றுவார் . ஜடாயு, ஸ்மார்த்தர்களுக்கும் , ஸ்ரீவைணவர்களுக்கும் , மாத்வர்களுக்கும் பொதுவான தெய்வம் ஸ்ரீராமன் .அவரை உங்களது தயானந்தர் நிராகரிக்கிறார் .அதற்கு உங்கள் பதில் என்ன ?

Bcak Nayar பீஃப் பிரியாணி சாப்பிடு என்று சங்கரரும் சொல்லவில்லை ; மாத்வரும் சொல்லவில்லை . சாவர்க்கர் தான் சொல்கிறார் .

Jataayu B’luru // // பசு மாம்சத்தை அனைவரும் தின்ன வேண்டும் என்று கூறியவர் மற்றொரு ஆச்சாரியர் // அதை அவர் தனிப்பட்ட கருத்தாகத் தான் கூறினார், ஒரு “மதக்கட்டளையாக” அல்ல. மேலும், வீரசாவர்க்கர் என்ற மகத்தான புரட்சிவீரரின், சமுதாய சிற்பியின் கருத்துக்களை 100% அப்படியே மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அவரும் எதிர்பார்க்கவில்லை. மேலும், சிந்தனையும் சுயபுத்தியும் கொண்ட நவீன மனிதன் (பெரும்பாலான இந்துக்கள் இத்தகையவர்களே) எவனும் உங்களைப் போல ‘வெச்சா குடுமி, சரைச்சா மொட்டை’ என்று யோசிக்க மாட்டான்.

Bcak Nayar வழக்கம் போல அடுத்து சைவ X வைணவ விவாதமாக்கும் முயற்சி .சைவ ஆச்சாரியர்களுக்கு ராமனின் பரத்வம் தான் ஏற்க முடியாதது .ராமன் கடவுளா இல்லையா என்பதல்ல ; திருமாலை , ராமனை அவர்கள் தேவதையா க ஏற்றுக் கொள்கிறார்கள் .அவர்கள் மத நம்பிக்கை படி மோஷ தாதா இல்லை என்கிறார்கள் .

Jataayu B’luru Useless debate. I am quitting.

Bcak Nayar பெரும்பாலான ஹிந்துக்கள் ராமனையும் பசுவையும் வணங்குகிறார்கள் . உமது ஆச்சாரியர்கள் அதை செய்வதில்லை .அதற்கு விரோதமாக தர்ம விரோதமாக பேசுகிறார்கள் .எனவே தான் அவர்கள் பத்தாம் வகுப்பு சரித்ர புத்தகத்திலும் உங்களை போன்ற அரசியல் வாதிகளின் பேச்சுகளிலும் மட்டும் எஞ்சி இருக்கிறார்கள் . You had to quit as a damage control measure Jataayu B’luru .Even if you do not nourish Hinduism , do not try to harm it . Is there an iota of lie in what I said ? கொஞ்சம் யோசியுங்கள் ஜடாயு .நானும் வள்ளுவரின் வரி ஒன்றை கூற விரும்புகிறேன் : ” தன் நெஞ்சு அறிய பொய்யற்க ” .

 

ஹிந்து அரசியல் இயக்கங்கள் .

சமீபத்திய சில விவகாரங்களில் ஒரு சில சந்தேகங்கள் ஊர்ஜிதமாவதை பார்த்தேன் .இவ்விவகாரங்கள் கீழ்க்கண்ட முடிவுகளை நோக்கி தான் தள்ளுகின்றன :
அ) நாட்டில் அதிக அளவு நாத்திகர்கள் இருப்பது திராவிடர் கழகத்திலோ இடதுசாரி இயக்கங்களிலோ அல்ல .மாறாக இந்துத்வ இயக்கங்களில் தான் ,தூய ,கலப்பற்ற நாத்திகர்கள் உள்ளனர் .
ஆ) இந்து மதத்திற்கு பெருங்கேடு ஏதாவது வரும் எனில் அது வெளியிலிருந்து வராது ; இந்த நாத்திகர்களிடமிருந்து தான் வரும் .
இ) கடும் பிராம்மண வெறுப்பு இந்து இயக்கங்களில் இருக்கிறது .முன்னால் இலை மறைவு காய் மறைவாக இருந்தது,இப்போது வெளிப்படையாகவே தெரிகிறது.
ஈ) இந்து இயக்க செயல்பாட்டாளர்கள் பலரது அரசியல் எதிர் அரசியல் தான் .இது எதிர் கலாச்சாரத்தை ஒத்தது . அரசியல் எதிரிகளின் முடிவிற்கு நேர் எதிர் நிலை எடுப்பது .முன் பின் சிந்திக் காமல் குதிரைக்கு குர்ரம் என்றால் ஆனைக்கு அர்ரம் என்ற பாணி .
உ) மாற்று மதங்களுடன் ஹிந்து மதத்தை ஒப்பிடக்கூடாது , அவற்றை மாதிரியாக கொண்டு நம் செயல்பாடுகளை திட்டமிடக் கூடாது என்னும் கருத்துடையவன் நான் .இருப்பினும் இதனை கூறாமல் இருக்க முடியவில்லை .மாற்று மதத்தை சார்ந்த அரசியல் இயக்கங்கள் தங்களது மத நம்பிக்கைகளில் எந்த சமரஸமும் செய்து கொள்வதில்லை .மதக் கொள்கைகளை அடமானம் வைத்து அரசியல் செய்வதில்லை .ஆனால் இங்கே …..
ஊ) முதலில் எனக்கு மதம் ; பிறகு தான் எனக்கு அரசியல் என்ற எண்ணமுடையவர்களுக்கு ஹிந்து இயக்கங்கள் ஏற்ற இடமில்லை .